உலக சந்தையில் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தங்கத்திற்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்று தெரிவித்ததை அடுத்து இந்தச் சரிவு ஏற்பட்டுள்ளது.
தங்கக் கட்டி
ஆனாலும், சுவிட்சர்லாந்து மற்றும் பிற வர்த்தக சுத்திகரிப்பு மையங்களிலிருந்து அனுப்பப்பட்ட தங்கத்தின் விலைகள் கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிப்பைப் பதிவு செய்திருந்தன.
எனினும், ஒரு கிலோ மற்றும் 100 அவுன்ஸ் தங்கக் கட்டிகளை அமெரிக்கா, வரிகளுக்கு உட்பட்ட சுங்கக் குறியீட்டின் கீழ் வகைப்படுத்தும் என்ற காரணத்தினால் இந்த அதிகரிப்பைப் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.