முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாமலுக்கும் அநுரவின் மகனுக்கும் இடையே பாரிய திட்டம்: எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

நாமல் ராஜபக்ச கைது செய்யப்படுவதை தடுக்கும் திட்டத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் (Anura Kumara Dissanayake ) மகனும் பங்குபற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி (Chaminda Wijesiri)  நேற்று (13.08.2025) தெரிவித்துள்ளார்.

மாலைத்தீவு செல்லும் போது வான்பரப்பில் நாமல், அநுர குமார மற்றும் அநுரவின் மகன் ஆகிய மூவரும் சந்தித்துக் கொண்ட சந்தர்ப்பத்தில், நாமலை கைது செய்யும் நடவடிக்கை திட்டம் தீர்க்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

அநுரவின் ஆட்சி

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “சிறிலங்கன் எயார் லைன்சில் ஜனாதிபதி அநுரவின் மகனுக்கு தொழில் கொடுக்க நாமல் ராஜபக்சவே உதவி செய்துள்ளார். 

நாமலுக்கும் அநுரவின் மகனுக்கும் இடையே பாரிய திட்டம்: எதிர்க்கட்சி குற்றச்சாட்டு | Anura S Son Is Making Political Deals With Namal

அந்த நன்றிக் கடனுக்காக ஜனாதிபதி மற்றும் அவருடைய மகன் மலைத்தீவு செல்லும் போது நாமலையும் அழைத்திருக்கலாம்.

கைது செய்யப்படுவதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்த அன்றே நாமல் மலைத்தீவு சென்றார். அவர் நாடு திரும்பிய நிலையில் கூட காவல்துறையினர் அவரை கைது செய்யவில்லை. அவர் விமான நிலையத்திலிருந்து நீதிமன்றம் சென்றார். இவற்றை உற்று நோக்கினால் காரணம் புரிந்து விடும்.

அரசியல் டீல்

அநுரவின் ஆட்சி ஆட்டம் காண்பது அவர்களுக்கு தென்படுகிறது.மேலும் அவர்களின் செயற்பாட்டின் பிரதி பலனும் அவ்வாறே இருக்கிறது.

நாமலுக்கும் அநுரவின் மகனுக்கும் இடையே பாரிய திட்டம்: எதிர்க்கட்சி குற்றச்சாட்டு | Anura S Son Is Making Political Deals With Namal

ஆதலால் அவர்களை காப்பாற்றக் கூடிய நண்பர்களே ராஜபக்ச குடும்பத்தினர். ஆட்சி கவிலும் போது நாமலுக்கு ஆட்சி மாற்றப்படும் போல் தோன்றுகிறது.

 கடந்த வரலாறுகளில் அநுரவின் குழுவினர் பொதுஜன முன்னணி அரசுக்கு ஆதரவு வழங்கினர்.அரசியல் டீல் ஒன்று நடப்பதாகவே நான் நினைகிறேன்.”என கூறியுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்