இந்த நாட்டில் ஜனாதிபதி பதவிச் சட்டத்தை இரத்து செய்வதற்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க எந்தவொரு சட்ட நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்று அவரது ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி பதவிச் சட்டத்தை இரத்து செய்வதற்கு எதிராக சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க(chandrika kumaratunga), நான்கு முன்னாள் ஜனாதிபதிகளுடன் சேர்ந்து சட்ட நடவடிக்கை எடுத்துள்ளார் என்று வெளியிடப்படும் தகவல் தவறானது என்றும் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.
எந்தவொரு சட்ட நடவடிக்கையிலும் ஈடுபடமாட்டார்
அதன்படி, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க எந்தவொரு சட்ட நடவடிக்கையிலும் ஈடுபட மாட்டார் என்று ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.


