கூலி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வெளிவந்துள்ள திரைப்படம் கூலி. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்திருந்தார்.
ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு நேற்று வெளிவந்த இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வெளிவந்தது. ஆனாலும் கூட உலகளவில் மாஸ் வசூல் சாதனையை படைத்துள்ளது.

ஆம், முதல் நாளே உலகளவில் ரூ. 155 கோடி முதல் ரூ. 160 கோடி வரை வசூல் செய்து, விஜய்யின் லியோ படத்தின் வசூல் சாதனையை கூலி முறியடித்துள்ளது. இதன்மூலம் தமிழ் சினிமாவில் முதல் நாள் அதிக வசூல் செய்த படமாக கூலி முதல் இடத்தை பிடித்துள்ளது.

லியோ சாதனையை முறியடித்த கூலி.. முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா
இலங்கை வசூல்
இந்த நிலையில், கூலி திரைப்படம் இலங்கையில் முதல் நாள் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளன.

அதன்படி, இப்படம் இலங்கையில் ரூ. 5 கோடி வசூல் செய்துள்ளது. இந்திய மதிப்புப்படி ரூ. 1.46 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

