ஐஸ்வர்யா ராஜேஷ்
தமிழ் சினிமாவில் உள்ள நடிகைகள் ஒவ்வொருவருக்கும் ஒரு தனி ஸ்டைல் உள்ளது. அப்படி மிகவும் தரமான கதைகளாக தேர்வு செய்து படங்கள் நடித்து மக்கள் மத்தியில் அங்கீகாரம் பெற்றவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
அடுத்தடுத்து படங்கள் நடிப்பவர் வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். கலா மாஸ்டரின் ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சி மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.


நடிகர் நானியுடன் 3-வது முறையாக இணையும் 33 வயது நடிகை.. யார் இயக்கத்தில் தெரியுமா?
அந்த விஷயம்
இந்நிலையில்,
சமீபத்தில் ஒரு விழாவில் ஐஸ்வர்யா ராஜேஷ், தனது குருவான கலா மாஸ்டர் குறித்து பேசியுள்ளார்.
அதில், ” கலா மாஸ்டர் தான் எனக்கு எப்போதும் கம்மியா மார்க் கொடுப்பார். ஆனால், அந்த கம்மியான மார்க் தான் என்னை இந்த அளவுக்கு உயர்த்தியிருக்கு.
என்னோட ஆரம்பம், கலா மாஸ்டர் இடம் இருந்துதான் தொடங்கியது. அந்த வாய்ப்பு எனக்கு கொடுத்ததற்கு அவருக்கு ரொம்ப நன்றி” என்று மிகவும் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசியுள்ளார்.


