வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 10 மணி முதல் நள்ளிரவு வரை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகையாளர்களுக்கான புறப்பாட்டு மண்டப நுழைவு வசதி வழங்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பை விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனம் விடுத்துள்ளது.
இந்த நடவடிக்கை, அனைத்து பயணிகளின் மற்றும் விமான நிலைய பயனாளர்களின் வசதியை உறுதிசெய்ய நடைமுறைப்படுத்தப்படுகிறது.
தீர்மானம்
இதன்மூலம், விமான நிலையத்தில் உச்சநேரங்களின் போது பயணிகளின் வசதிக்கான நடவடிக்கைகள் தடையின்றி நடைபெறவும், நெரிசலை சீராக நிர்வகிக்கவும் முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் சனநெரிசல் காரணமாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பதற்றமான சூழ்நிலையொன்று ஏற்பட்டமையை தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


