எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் டிவியில் பரபரப்பின் உச்சமாக எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
பரபரப்பாக கதைக்களம் செல்ல இந்த நேரத்தில் வேறு ஈஸ்வரி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த கனிஹா தொடரில் இருந்து விலகிவிட்டதாக தகவல் வந்துள்ளது.

குணசேகரனால் தாக்கப்பட்ட ஈஸ்வரி மருத்துவமனையில் மிகவும் சீரியஸான நிலையில் உள்ளார், அவருக்கு துணையாக தர்ஷினி மருத்துவமனையிலேயே உள்ளார். இன்னொரு பக்கம் ஜனனியை குற்றவாளி ஆக்க குணசேகரன் முயற்சி செய்ய கடைசியில் அது நடக்கவில்லை.
கடைசி எபிசோடில் ஜனனி, குணசேகரனிடம் சவால் விட்டுள்ளார், இந்த பிரச்சனை ஜெயிப்பேன் என பேசியுள்ளார்.

இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா?.. பிரபல கதாநாயகி தான்!
புரொமோ
இன்றைய எபிசோட் புரொமோவில், தர்ஷன் மருத்துவமனை கிளம்பியிருக்கிறார், ஆனால் அவரை அறிவுக்கரசி தடுத்திருக்கிறார் என தெரிகிறது.
இதனால் தர்ஷன் என்னை அம்மா பார்க்க அனுப்பவில்லை என்றால் இந்த கல்யாணம் நடக்காது என குணசேகரனுக்கே செக் வைக்கிறார்.
பின் ஜனனி, தர்ஷனிடம் உன் அம்மாவிற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றால் நீ அவர்களை விட யோசிக்க வேண்டும் என கூறுகிறார்.

