கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்.
இவரது நடிப்பில் தமிழில் ரகு தாத்தா படம் வெளியாகி இருந்தது, ஆனால் படம் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை. அதன்பின் கீர்த்தி சுரேஷ் ஹிந்தியில் நடித்த பேபி ஜான் படம் வெளியாகி இருந்தது.

அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா நடித்த தெறி படத்தின் ரீமேக் தான் பேபி ஜான். அட்லீ ஹிந்தியில் படம் தயாரிக்க இப்படத்தில் வருண் தவான் நாயகனாக நடிக்க கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்தார். படம் கடந்த வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ‘

ஸ்ருதி அம்மா செய்த கேவலமான வேலை, முத்து, ரவிக்கு தெரிந்த உண்மை.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ
புதிய கூட்டணி
பேபி ஜான் பட ரிலீஸிற்கு முன் அதாவது கடந்த வருட இறுதியில் கீர்த்தி சுரேஷ் தனது நீண்டநாள் நண்பரை திருமணம் செய்தார்.
திருமணத்திற்கு பிறகு கீர்த்தி சுரேஷ் நிறைய போட்டோ ஷுட் புகைப்படங்களை தான் வெளியிட்டு வந்தார்.
இந்த நிலையில் நடிகை கமிட்டாகியுள்ள ஒரு புதிய படம் குறித்த தகவல் வந்துள்ளது.
அதாவது கீர்த்தி சுரேஷ், மிஷ்கினுடன் இணைய உள்ளாராம், ஆனால் இயக்குனர் யார் என தெரியவில்லை.

என்ன விஷயம் என்றால் கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் இருவரும் இணைந்து படம் நடிக்க உள்ளார்களாம். Drumsticks Production தயாரிக்கும் இப்படத்தை இயக்கப்போவது யார் என தெரியவில்லை.

