கூலி
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் கூலி. இப்படம் வெளிவந்த நாளில் இருந்தே வசூல் குறித்து தொடர்ந்து நாம் பார்த்து வருகிறோம்.

ஆகஸ்ட் 14ம் தேதி வெளிவந்த இப்படம் தொடர்ந்து நான்கு நாட்கள் வசூலில் மாபெரும் வேட்டையாடி வந்தது. ஆனால், அதன்பின் வசூல் குறைய துவங்கிவிட்டது. இதற்கு இப்படம் சந்தித்த கடுமையான விமர்சனம்தான் முக்கிய காரணமாகும்.

தங்களது திருமண நாளை அழகாக கொண்டாடிய சாந்தனு-கீர்த்தி, போட்டோஸ்
வசூல் விவரம்
ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்படம் முழுமையாக பூர்த்தி செய்யவில்லை என்பதனால், முதல் நான்கு நாட்களுக்கு பின் வசூல் குறைந்துவிட்டது.

இந்த நிலையில், பாக்ஸ் ஆபிஸில் 10 நாட்களை கடந்திருக்கும் கூலி திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 10 நாட்களில் உலகளவில் ரூ. 465 கோடி வசூல் செய்துள்ளது.

