முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரணிலுக்காக திடீரென திரளும் கூட்டம்! பின்னணியில் இரட்டை வேடம் போடும் அரசியல்வாதிகள்

எதிர்க்கட்சிகளின் திடீர் கூட்டணி என்பது ரணில் விக்ரமசிங்கவை
காட்டிக் கொடுத்து தாங்கள் தப்பித்துக் கொள்ள முயற்சிகளை மேற்கொண்டு
இருக்கின்றார்கள் என்பது தெட்டத் தெளிவாக தெரிகின்றது என தேசிய மக்கள்
சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு
தெரிவித்துள்ளார்.

இன்று(24) பிற்பகல் மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், மக்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றார்கள்.இந்த குற்றவாளிகளை இந்த குற்றத்தோடு
தொடர்பு பட்டவர்களை ஊழல்வாதிகளை மக்கள் இனிமேலும் அனுமதிக்க மாட்டார்கள்
என்பது எங்களுக்குத் திட்டத் தெளிவாக விளங்குகின்றது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்

மக்களின் ஆதரவோடும்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது.

ரணிலுக்காக திடீரென திரளும் கூட்டம்! பின்னணியில் இரட்டை வேடம் போடும் அரசியல்வாதிகள் | Ranil Arrested Speech Prabhu

கடந்த காலங்களில் ரணில்
விக்ரமசிங்கவை விமர்சனம் பண்ணியவர்கள் அவருக்கு எதிராக தேர்தல்
காலங்களில் மோசமான பிரசாரங்களை மேற்கொண்டவர்கள் இன்று ஒன்று சேர்ந்து அவர்
நல்லவர் அவரை விடுதலை செய்ய வேண்டும் என கூறிக்கொண்டு இருக்கின்றார்கள்.

இதில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்கவோடு
இணைந்து ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்ற போதும் அவருக்கு எதிராக அவரை பிரதமர்
பதவியில் இருந்து நீக்கி மகிந்த ராஜபக்சவை பிரதமராக கொண்டு வந்தவர்.

பக்கசார்பு

அந்த
காலகட்டத்தில் மத்திய வங்கி பிணை மோசடி தொடர்பாக ரணிலுக்கு எதிராக மிக
பாரியளவு பிரசாரத்தை மேற்கொண்டவர் இன்று அவருக்காக அவரை விடுதலை செய்யக்
கோரி இன்று ஒன்று சேர்ந்து இருக்கின்றார்.

ரணிலுக்காக திடீரென திரளும் கூட்டம்! பின்னணியில் இரட்டை வேடம் போடும் அரசியல்வாதிகள் | Ranil Arrested Speech Prabhu

அதனைப் போன்று மொட்டு கட்சியின் பிரதான செயலாளர் கூட இன்றைய ஊடக சந்திப்பில்
அவரை பார்க்கக் கூடியதாக இருந்தது. அவரும் கூட நாட்டிலே மிகப்பெரிய திருடன்
ரணில் என குறிப்பிட்டவர் இன்று ரணிலை விட சிறந்தவர் இந்த நாட்டில் இல்லை என அவருக்கு ஆதரவு குரல் எழுப்புகிறார்.

அதேபோன்று இராதாகிருஷ்ணன், மனோ கணேசன் போன்றவர்கள் உள்ளூராட்சி மன்ற
தேர்தல்கள் மிக அவசியமானது அந்த தேர்தலை நடத்தாமல் ரணில் விக்ரமசிங்க காலம்
தாழ்த்துகின்றார், நிதிகளை வழங்காமல் எங்களை
ஏமாற்றுகின்றார் என அவருக்கு எதிராக கொதித்தெளுந்தவர்கள் இன்று அவருக்காக
குரல் கொடுக்கின்ற ஒரு தலைமைத்துவமாக  மாறி இருக்கின்றார்கள்.

மக்களின் ஆதரவோடும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னோக்கி
பயணித்துக் கொண்டிருக்கின்றது என்பதனை இந்த நேரத்தில் கூறிக் கொள்ள
விரும்புகின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.