முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள்.. அவரை பற்றி பலருக்கும் தெரியாத உண்மைகள்

நடிகர், அரசியல் என இரண்டிலும் சாதனை படைத்தவர் கேப்டன் விஜயகாந்த். இவருடைய 73வது பிறந்தநாளான இன்று, அவரை பற்றி பலருக்கும் தெரியாத உண்மைகள் குறித்து பார்க்கலாம் வாங்க.

விஜயகாந்த் பெயர் காரணம்

‘விஜயராஜ்’ என்கிற பெயர் பிடிக்காததால் இனிக்கும் இளமை பட இயக்குனர், விஜயகாந்த் என இவருக்கு பெயர் வைத்தாராம். விஜயகாந்த் சினிமாவில் வந்தபோது, அப்போது ரஜினிகாந்த் உச்ச நட்சத்திரமாக இருந்துள்ளார். அதனால், அவரது பெயரில் இருந்த காந்த்தை எடுத்து விஜயகாந்த் என பெயர் வைத்துள்ளார். 

கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள்.. அவரை பற்றி பலருக்கும் தெரியாத உண்மைகள் | Actor Vijayakanth 73 Birthday His Unknown Facts

படங்கள்

கேப்டன் பிரபாகரன், சட்டம் ஒரு இருட்டறை, உழவன் மகன், வைதேகி காத்திருடன்ஹால், தவசி, நரசிம்மா, ரமணா, என இதுவரை 150 படங்களுக்கும் மேல் விஜயகாந்த் நடித்துள்ளார்.

இதில், 1984ம் ஆண்டு ஒரு ஹீரோவாக விஜயகாந்த் 18 திரைப்படங்களில் நடித்து சாதனை படைத்தார். இந்த சாதனையை வேறு எந்த நடிகரும் செய்ததில்லை என கூறப்படுகிறது.

கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள்.. அவரை பற்றி பலருக்கும் தெரியாத உண்மைகள் | Actor Vijayakanth 73 Birthday His Unknown Facts

இயக்குநர்கள் எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் இராம நாராயணனன் ஆகிய இருவரும்தான், விஜயகாந்தை வைத்து அதிக எண்ணிக்கைகளில் படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சம்பளம் வாங்காமல்நடித்தவர்

விஜயகாந்த் எப்போதுமே படங்களின் சம்பளம் குறித்து கவலைப்படவே மாட்டாராம். சில படங்கள் திரையரங்கில் ஓடி மாபெரும் வெற்றிபெற்ற பிறகு சம்பளத்தை பெற்றுள்ளாராம். அதே போல், தனது நெருங்கிய நண்பர்கள் இயக்கி நடித்த சில படங்களில் விஜயகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.

அந்த படங்களுக்கு கூட அவர் சம்பளமே வாங்கமாட்டாராம்.

எஸ்.ஏ.சி இயக்கத்தில் விஜய்யின் செந்தூரபாண்டி படத்தில் முக்கியமான கேமியோ ரோலில் விஜயகாந்த் நடித்திருந்தார். ஆனால், இப்படத்திற்காக அவர் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லை.

கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள்.. அவரை பற்றி பலருக்கும் தெரியாத உண்மைகள் | Actor Vijayakanth 73 Birthday His Unknown Facts

அஜித் தான் CM.. ஜெயலலிதா அம்மா சொன்ன வார்த்தை! பிரலம் பரபரப்பு பேட்டி

எஸ்.ஏ.சி அவர்கள் பணம் தர முன்வந்தபோது கூட வாங்க மாட்டேன் என மறுத்துள்ளார்.

அதற்காக, இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் தன்னிடம் சொந்தமாக இருந்த நிலத்தை விஜயகாந்த் பெயருக்கு எழுதி கொடுத்துள்ளார். 

ஓயாமல் உழைத்தவர்

இவர் படங்களில் நடிப்பதற்காக 3 ஷிபிட்களில் வேலை பார்ப்பாராம். ஒரே நேரத்தில் பல படங்கள் கமிட் ஆனதால், 24 மணி நேரமும் இவருக்கு வேலை இருந்து கொண்டே இருக்குமாம். அது மட்டுமின்றி இவரால் ஒரு நாள் படப்பிடிப்பு கூட தலைப்பட்டதே இல்லை என சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள்.. அவரை பற்றி பலருக்கும் தெரியாத உண்மைகள் | Actor Vijayakanth 73 Birthday His Unknown Facts

பல கலைஞர்களை அறிமுகம் செய்தவர்

தமிழ் சினிமாவை தூக்கி விடுவதற்காக பல உதவியை விஜயகாந்த் செய்துள்ளார். அதில் ஒன்று தான் நல்ல கலைஞர்களை அவர் அறிமுகம் செய்தது. மன்சூர் அலிகான், சரத்குமார், அருண்பாண்டி உள்ளிட்ட பல நடிகர்கள் விஜயகாந்தால் அறிமுகப்படுத்தப்பட்டன.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்