ஜனாதிபதிக்கும் சாதாரண மக்களுக்கும் இலங்கையில் நீதி ஒன்று தான் என்பதை மக்கள்
உணர்ந்துள்ளனர் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன்
தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நேற்று (24) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின் ஊடகங்களுக்கு
கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதிக்கும் சாதாரண மக்களுக்கும்
இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
ஊழல் மோசடிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் என்று தேசிய மக்கள் சக்தியின்
தேர்தல் விஞ்ஞாபனத்திலேயே கூறப்பட்டிருந்தது.
அந்தவகையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர் செய்த ஊழலுக்காக கைது
செய்யப்பட்டுள்ளாரே தவிர அதில் எந்தவிதமான அரசியல் பின்னணிகளும்
பழிவாங்கல்களும் கிடையாது.

நீதியான முறையில் விசாரணைகள் இடம்பெற்று சாட்சியங்களின் அடிப்படையில் அவர்
கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதிக்கும் சாதாரண மக்களுக்கும் இலங்கையில்
நீதி ஒன்று தான் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்.
இந்த கைதானது நாட்டு மக்களுக்கு ஒரு செய்தியை கூறி நிற்கின்றது. தேசிய மக்கள்
சக்தி அரசில் யார் ஊழல் மோசடிகளில் ஈடுபடுகின்றார்களோ, ஈடுபட்டார்களோ அவர்கள்
எந்தவித தராதரமும் பார்க்கப்படாமல் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்
என்பதற்கு இந்த கைதினை உதாரணமாக கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

