முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது அரசியல் பழிவாங்கல் அல்ல என ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.
மட்டக்களப்பு வெல்லாவெளியில் இடம்பெற்ற போரதீவுப்பற்று பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டத்தில் இன்று(26.08.2025) கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டதன் மூலம் சட்டவாட்சி நிலைநாட்டப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
கலந்துரையாடப்பட்ட விடயங்கள்
இதேவேளை, குறித்த அபிவிருத்திக் குழு கூட்டத்தில், பொதுப் போக்குவரத்து, குடிநீர்
பிரச்சனை, காணிப் பிரச்சனைகள், பழுகாமம் வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள், வீட்டுத் திட்டங்கள், மத்திய சுற்றாடல் அதிகார சபை தொடர்பான
விடயங்கள் மற்றும் யானை மனித மோதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர்களான
ஞா.ஸ்ரீநேசன், இரா.சாணக்கியன், வைத்தியர் இ.ஸ்ரீநாத், போரதீவுப்பற்று பிரதேச
சபையின் தவிசாளர் விமலநாதன் மதிமேனன், உள்ளிட்ட பிரதேச சபையின் உறுப்பினர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.




