முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பொலிஸாரின் முறைப்பாட்டு புத்தக பக்கங்களை வாயில் இட்டு மென்ற நபர்

அநுராதபுரம் மஹவ, பொல்கடுவவைச் சேர்ந்த 36 வயது நபரொருவர் மஹவ தலைமையக பொலிஸ் நிலையத்தில்
முறைப்பாடு தொடர்பாக வாக்குமூலம் அளிக்க வந்தபோது, பொலிஸாரின் முறைப்பாட்டு
பதிவு புத்தகத்தின் இரண்டு பக்கங்களை கிழித்து வாயில் இட்டு மென்றதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தையடுத்து, அவர் மீது பொலிஸாரின் கடமையைத் தடுத்தல் மற்றும்
அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு,
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

சம்பவத்திற்கு முன்னர், குறித்த நபர், தமக்கு எதிராக அவதூறு பரப்பியதாக இரண்டு
நபர்களுக்கு எதிராக மஹவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்திருந்தார்.

பிணையில் செல்ல அனுமதி

ஆனால் முதல் நாளில் அவர் முன்னிலையாகாததால், பொலிஸார் மற்ற தரப்பினரின்
வாக்குமூலங்களைப் பெற்று, அவர்களை விடுவித்திருந்தனர்.

பொலிஸாரின் முறைப்பாட்டு புத்தக பக்கங்களை வாயில் இட்டு மென்ற நபர் | Man Chews Pages Of Police Complaint Book In Mouth

பின்னர் முறைப்பாட்டாளர் வந்தபோது, முறைப்பாட்டை தொடர விரும்பவில்லை என்று
தெரிவித்ததால், பொலிஸார் அதனை முடிவுறுத்தினர்.

இதனையடுத்து, குறித்த நபர் முறைப்பாட்டை மீண்டும் விசாரிக்க வேண்டும் என
வலியுறுத்தியதோடு, அந்த முறைப்பாட்டைப் பார்க்க வேண்டும் என்று கேட்டதாகவும், அதன்போது அவர் குறிப்பேட்டுப் பக்கங்களை கிழித்து வாயில் இட்டு
மென்றதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரின் முறைப்பாட்டு புத்தக பக்கங்களை வாயில் இட்டு மென்ற நபர் | Man Chews Pages Of Police Complaint Book In Mouth

இந்நிலையில், மஹவ நீதவான் நீதிமன்றம் அவருக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்