இலங்கையின் பிரபல போதைப் பொருள் வர்த்தகர்கள் இருவர் உள்ளிட்ட மூவர் நேற்று(27) மாலை இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் கமாண்டோ சலிந்த என்ற பெயரில் அறியப்படும் பாதாள உலகக்குழு உறுப்பினர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மற்ற இருவரில் ஒருவர் கெஹெல்பத்தர பத்மே என்று அழைக்கப்படும் பாதாள உலகக்கும்பல் உறுப்பினர் என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கிச் சூடு
இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கமாண்டோ சலிந்த மற்றும் கெஹெல்பத்தர பத்மே ஆகிய இருவரும் கொழும்பு அளுத்கடை நீதிமன்றத்தின் உள்ளே வைத்து துப்பாக்கிச் சூடு நடத்திக் கொலை செய்யப்பட்ட கணேமுல்லை சஞ்சீவ கொலையின் சூத்திரதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

