முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வைத்தியசாலையில் இருந்து வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி ரணில்!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வைத்தியசாலையில் இருந்து சிகிச்சை பெற்று வௌியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கடந்த 23 ஆம் திகதி முதல் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சாதாரண பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார்.

சிகிச்சை 

முன்னாள் ஜனாதிபதி மருத்துவமனையில் இருந்து வெளியேறினாலும், மருத்துவ ஆலோசனையின்படி அவர் வீட்டிலேயே ஓய்வெடுப்பார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வைத்தியசாலையில் இருந்து வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி ரணில்! | Former President Ranil Leaves The Hospital

ரணில் விக்ரமசிங்க வீட்டில் தங்கியிருக்கும் போது அவரது உடல்நிலையை குடும்ப மருத்துவர்கள் உன்னிப்பாகக் கண்காணிப்பார்கள் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது நடவடிக்கை

பொது நிதியை தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்திய குற்றச்சாட்டில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கடந்த 22 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

வைத்தியசாலையில் இருந்து வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி ரணில்! | Former President Ranil Leaves The Hospital

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க கடந்த 22 ஆம் திகதி இரவு, சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் இருந்து 23 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்