முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஹவுதி அமைப்பின் முக்கிய புள்ளியை சாய்த்தது இஸ்ரேல்.!

ஏமன் தலைநகர் சனாவில் இஸ்ரேல் நடத்திய விமான தாக்குதலில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் அரசாங்கத்தின் பிரதமர் அஹ்மத் அல்-ரஹாவி கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு உறுதி செய்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற இந்த தாக்குதலில், 2024 ஓகஸ்ட் மாதம் முதல் பிரதமராக பணியாற்றி வந்த அல்-ரஹாவி உட்பட பல அமைச்சர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அவர்கள் கடந்த ஆண்டு அரசு நடவடிக்கைகளை மதிப்பீடு செய்யும் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டிருந்தபோதே தாக்குதல் நடத்தப்பட்டதாக கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலின் பதிலடி

இந்த நிலையில், இஸ்ரேல் இராணுவம், “சனா பகுதியில் ஹவுதி பயங்கரவாத ஆட்சி சார்ந்த இராணுவ இலக்கு தாக்கப்பட்டது” என அறிவித்துள்ளது.

ஹவுதி அமைப்பின் முக்கிய புள்ளியை சாய்த்தது இஸ்ரேல்.! | Israeli Airstrike Killed Houthis Prime Minister

காசா போரின் பின்னணியில், சமீப மாதங்களில் ஹவுதிகள், இஸ்ரேலுக்கும் மேற்கு கப்பல்களுக்கும் எதிராக செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவில் தாக்குதல்களை நடத்தியதற்கு பதிலடியாகவே இந்த விமானத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஹவுதி அறிக்கை

எனினும், இன்று வெளியிடப்பட்ட ஹவுதி அறிக்கையில், “இஸ்ரேல் தாக்குதல்கள் எங்களின் பங்களிப்பை தடுக்காது; பலஸ்தீனர்களுக்கு ஆதரவாக எங்கள் இராணுவ நடவடிக்கைகள் தொடரும்” எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஹவுதி அமைப்பின் முக்கிய புள்ளியை சாய்த்தது இஸ்ரேல்.! | Israeli Airstrike Killed Houthis Prime Minister

இதேவேளை, கடந்த ஞாயிறு சனாவில் நடத்தப்பட்ட மற்றொரு இஸ்ரேல் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்து 90-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்