2009 ஆம் ஆண்டு இறுதிக் கட்டப் போரின் போது, அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவசரகால போர்நிறுத்தத்தை அறிவித்து, விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை தப்பிக்கவைக்கும் செயற்பாட்டை மேற்கோண்டுள்ளதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
எனினும், வேலுப்பிள்ளை பிரபாகரன் போர் நிறுத்தத்தைப் பயன்படுத்திக் கொண்டு தப்பிச் செல்வதற்குப் பதிலாக, பாதுகாப்புப் படையினரைத் தாக்கி சவால் விடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
பாதுகாப்பு அமைப்பை கருத்தைக் கருத்தில் கொள்ளாமல், ஜனவரி 29 முதல் – பிப்ரவரி 1, (2009 ஆம் ஆண்டு) வரை இந்தப் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
ஐநூறு வீரர்கள்
இதன் விளைவாக தாக்குதலில் கிட்டத்தட்ட ஐநூறு வீரர்கள் கொல்லப்பட்டதாக பொன்சேகா கூறியுள்ளார்.

ராஜபக்சக்கள் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததாகக் கூறினாலும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு, போர் எவ்வாறு முடிவுக்கு வந்தது என்பதை எந்த நேரத்திலும் தெளிவாகக் கூறுமாறு சவால் விடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

