பிச்சைக்காரன்
ஒரு கதையை எழுதும் இயக்குனர் ஒரு நடிகரை மனதில் வைத்து எழுதுவார்கள், ஆனால் அந்த நடிகரால் படத்தில் நடிக்க முடியாமல் போக வேறொருவர் கமிட்டாவார்.
அப்படி இயக்குனர் சசி தனது படத்தில் நடந்த ஒரு விஷயம் குறித்து பேட்டி அளித்துள்ளார்.

பிச்சைக்காரன்
சசி இயக்கத்தில் விஜய் ஆண்மணி, சாட்னா, தீபா ஆகியோர் நடிக்க கடந்த 2016ம் ஆண்டு வெளியான திரைப்படம் பிச்சைக்காரன்.
ரூ. 42.25 கோடி வரை வசூல் வேட்டை நடத்திய இப்படம் தமிழில் சூப்பர் டூப்பர் ஹிட். தமிழில் வெற்றியடைய சில மொழிகளில் படம் ரீமேக் ஆனது, அங்கேயும் ஹிட் தான்.

பிக்பாஸ் 9வது சீசன் குறித்து விஜய் டிவி அறிவித்த அப்டேட்… எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்
விஜய் ஆண்டணிக்கு திருப்புமுனையாக அமைந்த இந்த கதை முதலில் எழுதப்பட்டதே வேறொரு நடிகருக்காக தானாம். பிச்சைக்காரன் படம் குறித்து இயக்குனர் சசி ஒரு பேட்டியில், நடிகர் சித்தார்த்திடம் இப்பட கதையை கடந்த 2008ம் ஆண்டு கூறினேன்.
கதை சித்தார்த்துக்கு புரியாததால் அவர் அந்த படத்தில் நடிக்கவில்லை என கூறியுள்ளார். சசி அவர்களின் பார்வையை புரிந்துகொண்டு விஜய் ஆண்டணி நடிக்க பெரிய வெற்றியையும் கண்டார்.


