ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட மோசமான நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,411 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 3,000 பேர் காயமடைந்துள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் உள்ள குனார் என்ற மாகாணத்தில் குறித்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
கடுமையான நிலநடுக்கம்
இங்குள்ள வீடுகளில் பெரும்பாலானவை மண்ணால் கட்டப்பட்டவை என அந்நாட்டின் பேரிடர் முகாமைப்பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் இரவு 11.47 மணிக்கு குனார் மாகாணத்தில் குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளிகளாக பதிவாகி இருந்தது.
நங்கர்ஹார் மாகாணத்தில் நுலாலாபாத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த கடுமையான நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின.
இரவு நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் 800க்கும் மேற்பட்டவர்கள் மண்ணில் புதைந்து பலியாகினர் என முதல் கட்ட தகவல் வெளியாகியிருந்தது.

