கந்தானையில் கண்டெடுக்கப்பட்ட இரசாயனப் பொருள், வீட்டின் தோட்டத்தில் அலங்காரப் பாறைகளாக வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
படிக மெத்தம்பேட்டமைன் ஐஸ்(ICE) தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் அந்த இரசாயனப் பொருள், அருகிலுள்ள நிலத்தில் அப்புறப்படுத்தப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
100 கிலோவுக்கும் அதிகமான
தற்போது காவலில் உள்ள ஒரு சந்தேக நபரிடம் பொலிஸார் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, கந்தானையில் உள்ள வீடொன்றில்100 கிலோவுக்கும் அதிகமான இரசாயனப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

கந்தானையில் கண்டெடுக்கப்பட்ட இரசாயனப் பொருட்கள், கடந்த வாரம் மித்தெனியாவில் நடத்தப்பட்ட சோதனையின் போது மீட்கப்பட்டதைப் போன்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

