கடந்த புதன்கிழமை அமெரிக்காவின் உட்டாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்ட இளம் அரசியல் ஆர்வலர் சார்லி கிர்க்( Charlie Kirk) கொலை செய்யப்பட்ட வழக்கில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிர்க்கைச் சுட்டுக் கொன்ற பிறகு தப்பிச் செல்லும் சந்தேக நபரின் காணொளியை வெளியிட்ட எஃப்.பி.ஐ, சந்தேக நபரைக் கைது செய்வதற்கு வழிவகுக்கும் தகவல்களுக்கு $100,000 பரிசு வழங்குவதாக முன்னர் அறிவித்திருந்தது.
காட்டுப்பகுதியிலிருந்து மீட்கப்பட்ட துப்பாக்கி
துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் அதிக சக்தி வாய்ந்த துப்பாக்கியும் பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள ஒரு காட்டுப் பகுதியில் இருந்து அந்நாட்டு காவல்துறையினரால் மீட்கப்பட்டது.

உட்டாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது 31 வயதான சார்லி கிர்க் கழுத்தில் சுடப்பட்டார்.
இறுதிச்சடங்கில் ட்ரம்ப், ஜே.டி. வான்ஸ்
கிர்க்கின் உடல் வியாழக்கிழமை மதியம் ஏர்ஃபோர்ஸ் டூவில் கிர்க் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்த அரிசோனாவிற்கு கொண்டு செல்லப்பட்டது.

அடுத்த வார இறுதியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் கிர்க்கின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் இருவரும் தெரிவித்துள்ளனர்.

