முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

Bomb திரை விமர்சனம்

அர்ஜுன் தாஸ் தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களில் நடித்து வருகிறார், அந்த வரிசையில் விஷால் வெங்கட் இயக்கத்தில் வெளிவந்துள்ள பாம் படம் எப்படி? பார்ப்போம்.

Bomb திரை விமர்சனம் | Bomb Movie Review

கதைக்களம்

காயகம்மாபட்டி என்ற ஊரில் மக்கள் அனைவரும் சந்தோஷமாக வாழ்கின்றனர். அந்த ஊரில் எல்லோரும் ஒன்றிணைந்து சாமி கும்பிட்டு மலை மேல் வரும் ஜோதியை பார்த்தால் ஊர் மற்றும் மக்கள் நன்றாக இருப்பார்கள் என்று ஒரு நம்பிக்கை.

அந்த நேரத்தில் மலையில் இருந்து ஒரு கல் கீழே விழுந்து இரண்டாக உடைய, பெரிய கல் ஒரு சாமி, சிறிய கல் வேறு சாமி என ஊர் இரண்டாக பிறகு நீ உயர்ந்த ஆள், தாழ்ந்த ஆள் என்ற பிரிவினை உருவாகிறது.

Bomb திரை விமர்சனம் | Bomb Movie Review

இரண்டு ஊருக்கும் ஆகாமல் இருக்க அந்த ஊரை ஒன்றிணைக்க காளி வெங்கட் எவ்வளவோ போராடுகிறார், அவருடைய நண்பர் அர்ஜுன் தாஸ் எதையும் எதிர்த்து பேசாமல் அப்பாவி போல் ஒரு வாழ்கை வாழ, ஒரு கட்டத்தில் காளி வெங்கட் இறக்கிறார்.

ஆனால், அவரை யாராலும் தூக்க முடியவில்லை, அர்ஜுன் தாஸ் மட்டுமே தூக்க முடிகிறது, பிறகு காளி வெங்கட் இறந்து எப்படி இந்த ஊரை இணைத்தார் என்பதே மீதிக்கதை. 

Bomb திரை விமர்சனம் | Bomb Movie Review

படத்தை பற்றிய அலசல்

அர்ஜுன் தாஸ் அட இவர் தானா என்று சந்தேகம்படும் அளவிற்கு மிக செட்டில்ட் ஆக நடித்துள்ளார், அவர் குரல் கூட மென்மையாக தான் உள்ளது, உன் குரல்லுக்கு கொஞ்சம் சத்தம் போட்டலே எல்லாரும் பயந்துபோவான், இப்படி கோழையாக வாழ்கிறாயே என காளி வெங்கட் கேட்கும்படி ஒரு கோழையாக நடித்து அசத்தியுள்ளார்.

காளி வெங்கட் படத்திற்கு படம் தன் நடிப்பால் அடுத்தக்கட்டம் செல்கிறார், படம் முழுவதும் பிணம் போல் இவர் இருக்கும் காட்சி ஒரு கண் கூட இமைக்காமல் நடித்து மிரட்டியுள்ளார்.

இதை தாண்டி ஹீரோயின் சிவாத்மிகா ராஜசேகர், நடிகர்கள் சிங்கம்புலி, பாலசரவணன், நாசர், அபிராமி மற்றும் ஊர் மக்களாக வருபவர்கள் அனைவருமே சிறப்பாக நடிப்பை கொடுத்துள்ளனர்.

Bomb திரை விமர்சனம் | Bomb Movie Review

ஊரில் மக்கள் ஒன்றாக இருந்தாலும் சாமி என்ற பெயரில் ஊர் எப்படி பிரிகிறது, இதனால் சிறுவர்கள் மனதில் கூட ஏற்படும் வன்மம் என அனைத்தையும் தோல் உரித்து காட்டியுள்ள இயக்குனர் விஷால் வெங்கட்டிற்கு பாராட்டுக்கள்.

அதோடு ஊரே பிரிந்து செல்ல காளி வெங்கட் இறந்து அவர் உடலை கடவுளாக மாற கடைசியில் அர்ஜுன் தாஸ் சாமியாடி குறி சொல்வது என எல்லோரும் நாம் உட்பட ஒரு செகண்ட் சாமி படம் தானோ என நினைத்தால் அடுத்த செகண்ட்டே பின் கதைகள் வைத்து எல்லாம் நாம் தான், சாமி நம்மிடம் தான் உள்ளது என சொன்ன விதம் சபாஷ்.

Bomb திரை விமர்சனம் | Bomb Movie Review

இதெல்லாம் விட டைட்டில் பாம் என்பதற்கான அர்த்தம் படத்தில் காட்டிய விதம் செம கலகலப்பு.

அதே நேரத்தில் படத்தின் முதல் பாதி கதைக்குள் செல்லும் வரை கொஞ்சம் மெதுவாகவே நகர்கிறது, அதே நேரத்தில் கதை இன்னும் கொஞ்சம் முன்பு நடப்பது போல் காட்டியிருக்கலாம், இந்த டிஜிட்டல் யுகத்தில் அந்த ஊருக்கு அந்த ஊர் மக்கள் தவிற யாருமே வரமாட்டார்கள், ஏதோ 80களில் இருப்பது போல் இப்பவும் காட்டியுள்ளது கொஞ்சம் யதார்த்த மீறல்.

டெக்னிக்கலாக ஒளிப்பதிவு அப்படியே அந்த ஊரில் நாம் பயணப்பட்ட அனுபவம், இசை இமானுக்கு நீண்ட நாட்கள் கழித்து செம கம்பேக்.

க்ளாப்ஸ்

இப்படி ஒரு கதைக்கு காமெடியுடன் அதே நேரத்தில் அழுத்தமான சில காட்சிகளுடன் அமைத்த திரைக்கதை.

வசனங்கள்

நடிகர், நடிகை பங்களிப்பு

பல்ப்ஸ்

முதல் பாதியில் கொஞ்சம் மெதுவாக நகரும் காட்சிகள்.

மொத்தத்தில் இந்த பாம் வெடித்தது மக்களின் மூட நம்பிக்கைகான வெளிச்சமே 

Bomb திரை விமர்சனம் | Bomb Movie Review

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.