ரோபோ ஷங்கர்
சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்றதன் மூலம் தமிழக ரசிகர்களிடம் பிரபலமானவர் ரோபோ ஷங்கர்.
அதன்பின் வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைக்க நிறைய படங்கள் நடித்து வந்தார். சமீபத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான டாப் குக்கூ டூப் குக்கூ நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார், சமீபத்தில் தான் எலிமினேட் ஆனார்.
இதுவரை எந்த நிகழ்ச்சியின் எலிமினேஷனும் இவ்வளவு ஜாலியாக நடக்கவில்லை என அவரது வீடியோ வைரலாகி வந்தது.

மருத்துவமனை
முன்னதாக ரோபோ ஷங்கர் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

பின் உடல்நலம் சரியாகி சினிமாவில் ஆக்டீவாக இருந்து வந்தார். தற்போது திடீரென அவருக்கும் உடல்நலக் குறைவு ஏற்பட சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆனால் என்ன பிரச்சனை என்ற விவரம் எதுவும் வெளியாகவில்லை.

