ரஜினி-கமல்
தமிழ் சினிமாவில் இப்போது ஹாட் டாப்பிக்காக பேசப்படுவது ரஜினி-கமல் இணையும் படம் குறித்து தான்.
46 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் இணைந்து நடிக்க இருப்பதால் இப்போதே ரசிகர்களிடம் எதிர்ப்பார்த்து அதிகரித்துவிட்டது. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் இணைந்து இந்த படத்தை தயாரிக்க உள்ளது.

சமீபத்தில் விமான நிலையம் வந்த ரஜினி, படத்திற்கான கதையும் இயக்குனரும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என கூறியிருந்தார்.

ரசிகர் மன்றம் வைத்துள்ள நடிகரின் வாரிசுகள் பெரிய ஆளாகிறார்கள், ஆனால் அப்பாவிகள்…. அரவிந்த் சாமி ஓபன் டாக்
இயக்குனர்
முன்னதாக இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அவர் வெளியேறியுள்ளாராம்.
அவருக்கு பதில் ரஜினி-கமலை இயக்கும் வாய்ப்பு பிரதீப் ரங்கநாதனுக்கு கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவலும் உண்மையா என தெரியவில்லை.


