முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கனேடிய அமைச்சரவையிலிருந்து திடீரென விலகிய அமைச்சரின் பின்னணி

சமீபத்தில் கனடா அமைச்சரவையில் முக்கிய பதவியில் இருந்த கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் தனது பதவியில் இருந்து விலகினார்.

பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான அமைச்சரவையில் போக்குவரத்து மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராக பணியாற்றி வந்த அவர், இனி தேர்தல் அரசியலில் ஈடுபடமாட்டேன் என்றும் அறிவித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டில் கனடாவின் வரலாற்றில் முதன்முறையாக நிதி அமைச்சராக பொறுப்பேற்ற முதல் பெண்ணாக கிறிஸ்டியா வரலாறு படைத்தார். 

ரஷ்யாவில் விதிக்கப்பட்ட தடை 

கொரோனா காலகட்டத்தில் நாட்டின் பொருளாதாரத்தை திறம்பட கையாள்ந்ததற்காக அவர் பாராட்டப்பட்டார். 

கனேடிய அமைச்சரவையிலிருந்து திடீரென விலகிய அமைச்சரின் பின்னணி | Key Minister Resigns From Canadian Cabinet

Image Credit: THE WALL STREET JOURNAL

அத்துடன், துணைப் பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சராகவும் பணியாற்றிய அனுபவம் அவருக்குள்ளதாகவும் கூறப்படுகிறது.

உக்ரைனிய வேர்களைக் கொண்ட கிறிஸ்டியா, 2014 ஆம் ஆண்டு ரஷ்யா விதித்த நுழைவு தடைக்கு உள்ளான மேற்கத்திய தலைவர்களில் ஒருவராக இருந்தார். 

பிரதமர் கார்னியின் அழைப்பு

மேலும், 2024 டிசம்பரில் ஜஸ்டின் ட்ரூடோவின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது அமைச்சர்பதவியை விலகியதும், ட்ரூடோவின் அரசியல் வாழ்க்கையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட காரணமானதும் குறிப்பிடத்தக்கது. 

கனேடிய அமைச்சரவையிலிருந்து திடீரென விலகிய அமைச்சரின் பின்னணி | Key Minister Resigns From Canadian Cabinet

Image Credit: THE GLOBE AND MAIL

பின்னர் பிரதமர் பதவிக்கான போட்டியில் அவர் பங்கேற்றபோதும், மார்க் கார்னியிடம் தோல்வியடைந்தார்.

அவரது சமீபத்திய பதவி விலகலை ஏற்றுக்கொண்ட பிரதமர் கார்னி, கிறிஸ்டியாவை உக்ரைனுக்கான சிறப்பு தூதராகப் பொறுப்பேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்