புதிய இணைப்பு
அமைதியை விட அரசியலுக்கு முக்கியத்துவமா என நோபல் பரிசு குழுவிடம் வெள்ளை மாளிகை கேள்வி எழுப்பியுள்ளது.
வெனிசுலா நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினோ மச்சாடோ 2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசிற்கு தெரிவாகியுள்ளார்.
ட்ரம்ப்புக்கு நோபல் பரிசு மறுக்கப்பட்ட விவகாரத்தில் மரியாவையும், நோபல் தெரிவு குழுவினரையும் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஸ்டீவன் சியுங் கடுமையாக சாடியுள்ளார்.
அமைதியைவிட அரசியலுக்கு
செய்தித் தொடர்பாளர் ஸ்டீவன் சியுங்கின் மெலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி ட்ரம்ப் தொடர்ந்து பல போர்களை முடிவுக்கு கொண்டுவருவார்.

அமைதி ஒப்பந்தங்களை மேற்கொள்வார், உயிர்களைக் காப்பாற்றுவார்.
அவர் மனிதாபிமானமிக்கவர், அவரின் முழு சக்தியால் மலைகளைக்கூட நகர்த்தும் வல்லமை மிக்கவர், அவரைப் போல யாரும் இருக்க மாட்டார்கள்.
நோபல் குழுவினர் அமைதியைவிட அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் என்பதை நிரூபித்துவிட்டனர் எனப் பதிவிட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
2025ஆம் ஆண்டு நோபல் பரிசுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
கடந்த 6 ஆம் திகதி முதல் அறிவிக்கப்பட்டுவரும் நோபல் பரிசுகளின் வரிசையில் முக்கிய உற்றுநோக்கப்பட்ட சமாதானத்துக்கான நோபபல் இந்த அறிவிப்பு இன்று காலை ஒஸ்லோவில் உள்ள நோபல் நிறுவனத்தில் அறிவிக்கப்பட்டது.
நோபல் பரிசை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) பெரிதும் எதிர்பார்த்திருந்த நிலையில் இன்றைய தினம் அமைதிக்கான நோபல் பரிசு தொடர்பில் அறிவிப்பு வெளியாகியது.
ட்ரம்பின் கனவு கலைந்தது
சுமார் 7 போர்களை தான் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதாகக் குறிப்பிட்டு தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என ட்ரம்ப் வலியுறுத்தி வந்தார்.

எனினும் இவ்வாண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுவேலா எதிர்க் கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சோடா வசமாகியது. இந்நிலையில் நோபல் பரிசுக்காகக் காத்திருந்த ட்ரம்பின் கனவு கலைந்தது.
வெனிசுலா மக்களுக்கான ஜனநாயக உரிமைகளை ஊக்குவித்ததற்காகவும், சர்வாதிகாரத்தில் இருந்து ஜனநாயகத்திற்கு அமைதியான மாற்றத்தை நோக்கி அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காகவும் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விருதுக்கு 244 தனிநபர்கள் மற்றும் 94 அமைப்புகள் உட்பட மொத்தம் 338 பரிந்துரைகள் சமர்ப்பிக்க பட்டிருந்தது.

