அரசாங்கத்தின் இயலாமையே அமைச்சரவை மாற்றத்திற்கான காரணம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சன்ஜய பெரேரா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர், “அரசாங்கத்தின் பிரபல அமைச்சரே பிமல் ரத்நாயக்க, அவரின் கீழ் இருந்த அமைச்சிலே 323 கொள்கலன்கள் பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்டமை பெரும் பேசுபொருளாக்கப்பட்டது.
யாரென்றே தெரியாத அமைச்சர்கள்..
அது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் அனைத்து அமைச்சுகளும் எடுக்கப்படுவதே சிறந்த விசாரணைக்கு வழிவகுக்கும் என நினைகிறேன். எனக்கே தெரியாது யார் அமைச்சர்களாக இருந்தார்கள் என்று. மக்களுக்கும் இவர்கள் யார் என்று தெரியாது.

இவர்கள் யார் என்று மக்களுக்கு தெரியவில்லை என்றால், இவர்கள் மக்களுக்கு சேவை செய்யவில்லை என்றே தோன்றுகிறது. ஊடகத்திலும் இவர்களை காண கிடைப்பதில்லை. அவர்கள் வேலை செய்தாலே ஊடகங்களும் செய்திகளை வெளியிடும்.
இவர்கள் வேலை செய்யாததாலேயே ஜனாதிபதி அமைச்சரவை மாற்றம் செய்துள்ளார். இவர்கள் ஒரு வருடமாக மக்களுடன் இருக்கவில்லை. அத்தோடு தொகுதியில் உள்ள எம்.பி யார் என்று மக்களுக்கு தெரியாது. புதிய அமைச்சர்களின் பெயர் கூட யாருக்கும் தெரியாது” என கூறியுள்ளார்.

