சம்பத் மனம்பேரி என்ன கூறுவார் என்பதனை நாமல் ராஜபக்ச அறிந்துள்ளாரா என்பது எதிர்வரும் விசாரணைகளிலிருந்து தெரியவரும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறிய அவர் மேலும் கூறுகையில், ”அடுத்ததாக என்ன செய்தியை வழங்க உள்ளோம் என்பதை சம்பத் மனம்பேரியிடமே கேட்க வேண்டும்.
சம்பத் மனம்பேரி என்ன கூறுவார் என்பதனை நாமல் ராஜபக்ச அறிந்துள்ளாரா என்பது எதிர்வரும் விசாரணைகளிலிருந்து தெரியவரும்.
சில சமயங்களில் சம்பத் மனம்பேரி என்ன கூறுவார் என்பதனை நாமல் ராஜபக்ச அறிந்துகொள்ளாமல் இருக்கவும் முடியும்.
அதனால் இந்த வாரம் ஒன்று அடுத்த வாரம் ஒன்று என கூறுகிறார்.
உண்மையில் விசாரணை பிரிவினர் கிடைக்கின்ற சாட்சியங்களுக்கு அமைவாக விசாரணைகளை முன்னெடுத்து சரியான நபர்களை அடையாளம் கண்டு, சட்டத்தின் முன் நிறுத்தும் செயற்பாடுகளையே முன்னெடுக்கின்றனர்” என குறிப்பிட்டுள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல முக்கிய செய்திகளுடன் வருகின்றது இன்றைய நாளுக்கான செய்திகளின் தொகுப்பு,

