முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இஸ்ரேலில் ட்ரம்பின் உரைக்கு குறுக்கிட்ட எம்பிக்களுக்கு நேர்ந்த கதி!

இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உரையாற்றி கொண்டிருந்தபோது குறுக்கிட்ட இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாதுகாப்பு அதிகாரிகளால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

ட்ரம்ப் தலைமையிலான சர்வதேச சமூகத்தின் தீவிர முயற்சிகளுக்கு பலன் கிடைத்தைதையால் மத்திய கிழக்கு பிராந்தியம் இன்று (13) அமைதியின் விடியலைக் கண்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல்-பாலஸ்தீன போர் மோதலுக்கு இடைநிறுத்தம் கொண்டுவருவதற்கான அமைதித் திட்டத்தை செயல்படுத்துவதன் இது நடந்தேறியது.

வரலாற்று நிகழ்வு

அதன்படி, இரண்டு ஆண்டுகளாக ஹமாஸால் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலிய பணயக்கைதிகளில், இருபது பேர் மட்டுமே இன்னும் உயிருடன் இருந்த நிலையில், அவர்களை ஹமாஸ் இன்று இஸ்ரேலிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்தது.

இஸ்ரேலில் ட்ரம்பின் உரைக்கு குறுக்கிட்ட எம்பிக்களுக்கு நேர்ந்த கதி! | Two Mps Disrupt Trump Speech Israel Parliament

இரண்டு ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட இந்த வரலாற்று நிகழ்வு, இஸ்ரேல் முழுவதும் பல இடங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டதுடன், ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் தங்கள் கண்களால் அதைக் காண முக்கிய நகரங்களில் கூடியிருந்தனர்.

இதன்படி, குறித்த வரலாற்று நிகழ்வில் கலந்து கொள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று நான்கு மணி நேர குறுகிய பயணமாக இஸ்ரேலுக்கு வந்தார்.

அப்போது, இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றையும் ட்ரம்ப் ஆற்றி இருந்தார்.

பாலஸ்தீனத்தை அங்கீகரி

இவ்வாறானதொரு பின்னணியில், இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் ட்ரம்ப் உரையாற்றிக் கொண்டிருந்த போது, குறுக்கிட்ட இரண்டு எம்பிக்கள் அவரை கடுமையாக விமர்சித்து பாலஸ்தீனத்தை அங்கீகரிக்குமாறு கூச்சலிட்டுள்ளனர்.

இஸ்ரேலில் ட்ரம்பின் உரைக்கு குறுக்கிட்ட எம்பிக்களுக்கு நேர்ந்த கதி! | Two Mps Disrupt Trump Speech Israel Parliament

பின்னர் ஓஃபர் காசிஃப் மற்றும் அய்மன் ஓதே எம்பிக்கள் இருவரும் அவர்களிடமிருந்த பதாகைகள் பறிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகாரிகளால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இவ்வாறு வெளியேற்ப்படுவதற்கு முன்பு, ஓதே ஒரு காகிதத்தை உயர்த்திப் பிடித்து பாலஸ்தீனத்தை அங்கீகரி! என கூச்சலிட்டுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.