முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கஜ்ஜாவின் கொலையில் தொடரும் மர்மம்! ஜனாதிபதியை நாடும் மகன்

தனது தந்தையின் கொலைக்கும் தனக்கும் தொடர்புகள் உள்ளதாக பரவும் செய்திகளை “கஜ்ஜா“ எனப்படும் அருண விதான கமகேவின் மகன் இந்துவர விதானகமகே மறுத்துள்ளார்.

யூடியூப் நேர்காணல் ஒன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

தனது தந்தையின் கொலைக்கு பின்னால் இருக்கும் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்குமாறு குறித்த நேர்காணல் ஊடாக அருண விதானகமகேவின் மகன் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தன்னை ராஜபக்சர்களோ அல்லது வேறு எவரும் வழிநடத்தவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உண்மையான குற்றவாளி

குறித்த நேர்காணலில் அருண விதானகமகேயின் மகன் இந்துவர விதானகே மேலும் கருத்து தெரிவித்திருந்தார்.

கஜ்ஜாவின் கொலையில் தொடரும் மர்மம்! ஜனாதிபதியை நாடும் மகன் | Request Find The Real Culprits Behind Kajja Death

தனது தந்தையைக் கொலை செய்த உண்மையான கொலையாளியைக் கண்டுபிடிக்க விரும்புவதாகவும் ராஜபக்சக்களையோ அல்லது வேறு யாரையோ காப்பாற்ற தான் முயற்சிக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

சம்பத் மனம்பேரிக்கு அப்பால் ஒரு குழு இருப்பதாக உள்ளதாகவும் “கஜ்ஜாவின்” மகன் குறித்த நேர்காணலில் வெளிப்படுத்தியுள்ளார்.

கொலையில் ஈடுபட்ட குழுக்கள் தனது அறிக்கைகளால் விடுவிக்கப்பட்டதாக உணர்ந்ததாகவும், அதனால்தான் உண்மையை விளக்க குறித்த நேர்காணலுக்கு வந்ததாகவும் அவர் கூறினார்.

பெக்கோ சமன் 

பெக்கோ சமன் இந்தக் கொலைக்குப் பின்னால் இருக்கலாம் என தான் சந்தேகிப்பதாகவும் அவரது தந்தையின் வாகனங்களில் ஒன்று தொடர்பான பகை மற்றும் கஞ்சா பொதிகள் தொடர்பான தகராறு காரணமாக பெக்கோ சமன் இந்தக் கொலையை செய்திருக்கலாம் எனவும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

கஜ்ஜாவின் கொலையில் தொடரும் மர்மம்! ஜனாதிபதியை நாடும் மகன் | Request Find The Real Culprits Behind Kajja Death

சம்பத் மனம்பேரி அரசியல் கட்சியின் தேவைகளைப் பூர்த்தி செய்ய விரும்பியதாகவும், இந்த இரண்டு குழுக்களும் ஒன்றிணைந்துள்ளனவா என்ற சந்தேகம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இறுதியாக, எந்த அரசியல்வாதியும் தனக்கு பணம் கொடுக்கவில்லை என்றும், தனது தந்தைக்கு நீதி கிடைக்க மட்டுமே விரும்புவதாகவும் கொலை செய்யப்பட்ட “கஜ்ஜாவின்” மகன் இந்துவர தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.