முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்திய வீட்டுத்திட்டத்தில் அரசாங்கம் செய்த பெரும் தவறு: ஜீவன் குற்றச்சாட்டு

இந்திய வீட்டுத்திட்டத்தை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க அரசாங்கம் எடுத்த தீர்மானம் பாரிய தவறாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

பண்டாரவளையில் ஜனாதிபதியால் வழகங்கப்பட்ட மலையக மக்களுக்கான 2000 வீடுகளுக்கான உரிமைப்பத்திரம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர்,

இந்திய வீட்டுத்திட்டத்தில் அரசாங்கம் செய்த பெரும் தவறு: ஜீவன் குற்றச்சாட்டு | Indo Lanka Housing Project Phase Iv

அரசின் தவறு

ஆட்சி மாற்றத்தின் பின்னர் மக்களின் நன்மதிப்பை பெற்றுக்கொள்வதற்காக இந்திய வீடமைப்பு திட்டத்தை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையாக வழங்க முடிவெடுத்துள்ளது.அது பெரிய தவறு.

ஏனென்றால் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஏதோ ஒரு வகையில் பட்டியல்படுத்தப்பட்டு அரச சார்பற்ற நிறுவனமோ அல்லது அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் ஏதோ ஒன்று அவர்களுக்கு வழங்கப்படும்.ஆனால் லயன் அறைகளில் இருப்பவர்களுக்கு அது சாத்தியமில்லை.

நாங்கள் 1300 வீடுகளை கட்டும் திட்டத்தை ஆரம்பித்திருந்தோம்.ஆனால் கட்சி சார்பாக கொடுப்பதாக குற்றம் இருந்தது.ஆனால் நாங்கள் தேர்ந்தெடுக்கும் முறைமை ஒன்றை பின்பற்றினோம்.

ஒரே வீட்டில் வாழும் அதிக குடும்பங்கள் மற்றும் தற்காலிக வீட்டில் வசிப்போருக்கே வழங்க உத்தேசித்திருந்தோம்.

இந்திய வீட்டுத்திட்டத்தில் அரசாங்கம் செய்த பெரும் தவறு: ஜீவன் குற்றச்சாட்டு | Indo Lanka Housing Project Phase Iv

14500 தற்காலிக குடியிருப்புகள்

மலையத்தில் 14500 தற்காலிக குடியிருப்புகள் காணப்படுகிறது.அதில் 4500 அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டதாகும்.
அரச அறிவிப்பில் 2000 வீடுகள் வழங்கப்படுவதாக இருந்தது.

நாங்கள் ஆரம்பித்த 1300 வீடுகளை தான் வழங்குகிறார்கள் என எண்ணினோம்.அது தவறில்லை.திகாம்பரம் கட்டிய வீடுகளை நாங்கள் வழங்கினோம்.நாங்கள் கட்டிய வீடுகளை அமைச்சர் வித்தியாரத்தன வழங்கிறார் என்பதில் எவ்வித பொறாமையும் இல்லை.

ஆனால் கட்டம் 4 10,000 வீடுகள் என்றிருக்கிறது.கட்டம் இரண்டே இன்னும் முடிக்கவில்லை.இந்த வீடுகள் எப்போ வரும் என சொல்ல முடியாது.வீடுகள் கட்டப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.