80களில் முன்னணி நடிகையாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி ஆகிய பல மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.


யாஷ் நடித்து வரும் ‘டாக்ஸிக்’ படத்தின் காட்சிகள் இணையத்தில் லீக்கானது.. படக்குழுவினர் அதிர்ச்சி!
இவரா?
ரஜினி, கமல் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தற்போது ஒரு கட்சியில் வலம் வருகிறார். அந்த நடிகை வேறு யாருமில்லை, ஜெயப்பிரதா தான்.
தெலுங்கில் வெளியான ‘பூமி கோசம்’ படத்தின் மூலம் வெள்ளித்திரைக்குள் நுழைந்தார் ஜெயப்பிரதா. அதை தொடர்ந்து பாலசந்தர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான ‘மன்மத லீலை’ படத்தில் நடித்தார்.
பின் ரஜினி, கமல் இணைந்து தமிழில் வெளியான ‘நினைத்தாலே இனிக்கும்’, 47 நாட்கள், தசாவதாரம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
நடிப்பில் கவனம் செலுத்தி வந்த ஜெயப்பிரதா என்.டி.ராமராவ் அழைப்பின் பேரில் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார். இவர் இயக்குநர் ஸ்ரீகாந்த் நஹாட்டா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
ஆனால், ஸ்ரீகாந்த் ஏற்கனவே திருமணமாகி 3 குழந்தைகளின் தந்தை. முதல் மனைவியை விவாகரத்து பெறாமல் இவரை திருமணம் செய்துள்ளார்.


