போதைப்பொருள் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சம்பத் மனம்பேரியின் வழக்கில், தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சராக இருக்கும் ஒரு சட்டத்தரணி முன்னிலையாகியுள்ளதாக பொதுஜன பெரமுன தரப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானகவின் கருத்துக்கமைய குறித்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த சட்டத்தரணி தற்போது அரசாங்கத்தில் மிகவும் சக்திவாய்ந்த நபராக காணப்படுவதாக டி.வி. சானக கூறியமையை மேற்கோள்காட்டி தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வழக்கு அறிக்கை
இது தொடர்பான அனைத்து தகவல்களும் வழக்கு அறிக்கையுடன் விரைவில் வெளியிடப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்டு இந்த விடயத்தை கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், சம்பத் மனம்பேரிக்கு அவரது கட்சியை விட சம்பந்தப்பட்ட அமைச்சருடன் அதிக தொடர்பு இருப்பதாக நாமல் கூறியுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் விளக்கியுள்ளன.

