முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விளையாட்டு சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக அமைக்கப்படவுள்ள செயல்பாட்டுக் குழு

இலங்கையில் விளையாட்டு சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான விரைவான நடவடிக்கைகளை
எடுக்க பொது மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளைக் கொண்ட ஒரு
செயல்பாட்டுக் குழுவை அமைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் இன்று சுற்றுலா அமைச்சில் நடைபெற்ற
சிறப்புக் கூட்டத்தின் போது இந்த தீர்மானத்தை அறிவித்தார்.

சர்வதேச பார்வையாளர்களை ஈர்த்தல்

இலங்கையில் கிரிக்கெட், ரக்பி மற்றும் கால்பந்து போட்டிகள் உட்பட தேசிய
மற்றும் சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளை நடத்தி ஊக்குவிப்பதன் மூலம் சர்வதேச
பார்வையாளர்களை ஈர்ப்பது குறித்து இன்றைய கூட்டத்தின் போது விவாதம்
நடத்தப்பட்டது.

அத்துடன் பல்வேறு நிகழ்வுகளுக்காக ஆண்டுதோறும் இலங்கைக்கு வருகை தரும் ஏராளமான
விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், அதிகாரிகள் மற்றும் பார்வையாளர்களை
ஈர்க்கும் வாய்ப்புகள் குறித்தும் இன்றைய கூட்டத்தில் பேசப்பட்டது

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க விளையாட்டு நிகழ்வுகள் இன்னும் முழுமையாகப்
பயன்படுத்தப்படவில்லை என்பதை பங்கேற்பாளர்கள் இதன் போது எடுத்துரைத்தனர்.

விளையாட்டு சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக அமைக்கப்படவுள்ள செயல்பாட்டுக் குழு | Sports Tourism Sri Lanka

இலங்கையை விளையாட்டு சுற்றுலா தலமாக மாற்றல்

இந்த நிலையில், விளையாட்டு மற்றும் சுற்றுலாத் துறைகளை இணைப்பதற்கான உத்திகளை
ஆராய்வது, சர்வதேச ஊக்குவிப்பை மேம்படுத்துவது, உள்கட்டமைப்பை மேம்படுத்துவது
மற்றும் இலங்கையை ஒரு முன்னணி விளையாட்டு சுற்றுலா தலமாக மாற்ற தேவையான
வழிகாட்டுதல் மற்றும் திட்டமிடலை வழங்குவதும், அமைக்கப்படவுள்ள புதிய
குழுவால், மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.