சன் டிவி
சன் டிவி என்றாலே சீரியல்கள் தான் ஸ்பெஷல். அந்த சீரியல்களில் ஒரு ஸ்பெஷல் என்னவென்றால் எந்த ஒரு சீரியலிலும் திருமணம் என்பது பிரச்சனைகள் இல்லாமல் நடக்கவே நடக்காது.
ஒரு திருமணத்தை ஒரு மாதத்திற்கு நடத்துவார்கள், அப்படி எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சமீபத்தில் தர்ஷன்-பார்கவி திருமணம் பல எபிசோடுகள் ஒளிபரப்பானது.

மோசமான பாட்டியின் உடல்நிலை, வீட்டிற்கு வந்த காவேரிக்கு ஏற்பட்ட சோகம்.. மகாநதி சீரியல் புரொமோ
அதேபோல் கயல், அன்னம், மருமகள் மெகா சங்கமத்தில் திருமண எபிசோட் பல வாரங்கள் ஒளிபரப்பானது.

சிங்கப்பெண்ணே
அப்படி தான் இப்போது சிங்கப்பெண்ணே சீரியலில் திருமண எபிசோட் ஒளிபரப்பாகிறது.
அன்பு-ஆனந்தி இவர்களது திருமணம் நடக்குமா இல்லையா என்பது தான் இப்போது ரசிகர்களின் பெரிய கேள்வியாக உள்ளது. அன்பு தனது நிச்சயதார்த்தத்தில் இருந்து தப்பித்து எப்படி ஆனந்தியை திருமணம் செய்வார் என்ற பரபரப்பு தான் ஓடிக் கொண்டிருக்கிறது.
தற்போது சிங்கப்பெண்ணே சீரியலின் ஸ்பெஷல் புரொமோவில் திருமணப்பெண் கோலத்தில் ஆனந்தி அன்பு பக்கத்தில் மணமேடையில் உட்காருவது போல புரொமோ வந்துள்ளது.
View this post on Instagram

