யாழில் (Jaffna) போதை பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைத நடவடிக்கை நேற்று (18) இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் – மணியம் தோட்டம் பகுதியை சேர்ந்த 21 வயதுடைய ஒரு இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இரகசிய தகவல்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “குறித்த இளைஞர் ஒரு கிராம் 200 மில்லிகிராம் ஐஸ் போதை பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ். மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் காவல்துறை புலனாய்வு
பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது நடவடிக்கை
இதனடிப்படையில், யாழ்ப்பாண காவல்துறை
போதை தடுப்பு பிரிவினர் குறித்த கைது நடவடிக்கையை
முன்னெடுத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளையடுத்து, அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

