யாழ்ப்பாணம் வசாவிளானில் தனியார் காணியில் இராணுவ வைத்தியசாலை அமைக்கப்பட்டு வரும் நிலையில், தமிழரசுக் கட்சியின் தலைவர் சிவிகே சிவஞானம் மற்றும் பதில் பொதுச் செயலாளர் சுமந்திரன் ஆகியோர் அதனை பார்வையிட்டுள்ளனர்.
குறித்த நேரடி விஜயம், நேற்றையதினம் (21.10.2025) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.
இதன்போது, வலி வடக்கு
தவிசாளர் சுகிர்தன் மற்றும் குறித்த காணி உரிமையாளர் ஆகியோர் இணைந்திருந்தனர்.

சட்ட நடவடிக்கை
இங்கு தனியார் காணி உரிமையாளருடன் கலந்துரையாடிய சுமந்திரன், குறித்த இராணுவ
வைத்தியசாலை கட்டடத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கையை மிக விரைவில்
மேற்கொள்ளவுள்ளதாக உறுதியளித்துள்ளார்.


