காந்தாரா சாப்டர் 1
காந்தாரா சாப்டர் 1 படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம். உலகளவிலும் சரி, இந்தியாவிலும் சரி புதிய வசூல் சாதனைகளை காந்தாரா சாப்டர் 1 படைத்து வருகிறது.

மேலும், 2025ஆம் ஆண்டில் இதுவரை வெளிவந்த இந்திய திரைப்படங்களில் அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனையையும் படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வசூல்
இந்த நிலையில், இப்படம் இதுவரை உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ரிஷப் ஷெட்டி இயக்கி ஹீரோவாக நடித்திருந்த இப்படம் இதுவரை 23 நாட்களை வெற்றிகரமாக கடந்து, உலகளவில் ரூ. 830 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எவ்வளவு வரும், ரூ. 1000 கோடியை தொடுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

