முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையில் அதிகரிக்கும் கொலைச் சம்பவங்கள் : எச்சரிக்கும் நாமல்

இலங்கையில் அண்மைக் காலமாக கொலைச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் சட்டம் ஒழுங்கு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை விட்டு நழுவுவதாகத் தோன்றுகிறது என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விடயம் குறித்து தனது ‘எக்ஸ்’ (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த பதிவில், ”சில தேசிய மக்கள் சக்தி அமைச்சர்கள் தினசரி துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நின்றுவிட்டதாகக் கூறினாலும், சில குழுக்களுக்கு ஏற்றவாறு கொலைகள் தொடர்ந்து மீண்டும் நிகழ்கின்றன.

பாதுகாப்பை உறுதி செய்வதல்

இந்த சம்பவங்களை அரசாங்கம் அவசரமாக திட்டமிட்ட குற்றக் குழுக்களுடனும், போதைப்பொருள் நடவடிக்கைகளுடனும் தொடர்புபடுத்துகின்றது.

இந்தக் கூற்றுக்கள் இருந்தபோதிலும், இந்தக் கொலைகளுக்காகக் கைது செய்யப்பட்டவர்கள் மிகக் குறைவு. மக்கள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொள்வதும், சட்டம் ஒழுங்கு மீது அரசாங்கத்துக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லாததும் கவலை அளிக்கிறது.

தேசிய மக்கள் சக்தி நிர்வாகம் உண்மையாகவே கட்டமைப்பு மாற்றம் மற்றும் அபிவிருத்திக்கு உறுதியுடன் இருந்தால், அதன் முதல் முன்னுரிமை குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாக இருக்க வேண்டும்.

அதிகரித்து வரும் கொலைகளால், இப்போது எவரும் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரியவில்லை.

எனவே, பொதுச் சேவையில் ஈடுபடும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் உட்பட அனைத்து எதிர்க்கட்சி அரசியல்வாதிகளுக்கும் அரசாங்கம் பாதுகாப்பை வழங்க வேண்டும்“ என கோரிக்கை விடுத்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்