சிங்கப்பெண்ணே சீரியலில் கடந்த வாரம் அன்பு – ஆனந்தி திருமணம் ஒருவழியாக நடந்து முடிந்தது. ஆனால் அது ஆனந்திக்கே பெரிய அதிர்ச்சியாக அமைகிறது.
தாலியை கழற்றி எறியும்படி அன்புவின் அம்மா சொல்கிறார், ஆனால் அதை செய்ய வேண்டாம் என ஆனந்தியின் அப்பா சொல்ல, ஆனந்தி அதை கழற்றவில்லை.

கெஞ்சிய அப்பா
இந்நிலையில் தற்போது சிங்கப்பெண்ணே தொடரின் அடுத்த வார ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஆனந்தியின் அப்பா அன்புவின் பாசம் பற்றி மிகவும் உருக்கமாக ஆனந்தியிடம் பேசுகிறார்.
அதன் பின் நேராக அன்புவின் அம்மா வீட்டுக்கே சென்று அவருடம் கெஞ்சுகிறார். அன்புவின் அம்மா மனமிறங்குவாரா? பொறுத்திருந்து பார்க்கலாம். ப்ரோமோ இதோ.

