இந்தோனேசியாவிற்கு (Indonesia) அருகே உள்ள திமோர் தீவில் சக்திவாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்று ( 27) அதிகாலை 6.2 மெக்னிடியூட் அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது.
ஜகார்த்தா நேரப்படி காலை 00:04:28 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது, வட மத்திய திமோர் ரீஜென்சியிலிருந்து வடமேற்கே 82 கி.மீ தொலைவில், 75 கி.மீ ஆழத்தில் மையப்பகுதி அமைந்திருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.
சுனாமி எசச்ரிக்கை
எனினும் சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என்று நாட்டின் வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் (BMKG) தெரிவித்துள்ளது.

இந்த நில அதிர்வினால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Oct 26_4⃣ #sundayvibes
Climate Awareness🚩🚨M6.2 earthquake near Timor Island, #indonesia, at 95 km depth, 129 km from Kupang
⚡️Thunderstorm in Queensland, #Australia
🌀cat 4 hurricane Melissa is moving towards #Jamaica, wind speed is 225 km/h
🧊Large hail in Ipswich, Australia https://t.co/JBhCRPfUjL pic.twitter.com/OijXgxtLEl— Irene (@irene_makarenko) October 26, 2025

