விஷ்ணு விஷாலின் அடுத்த படம் ‘ஆர்யன்’ வரும் அக்டோபர் 31ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. ராட்சசன் பட பாணியில் சைக்கோ கில்லர் யார் என்பதை கண்டறியும் கதை இது என்பது ட்ரெய்லர் பார்க்கும்போதே எல்லோருக்கும் தெரிந்து இருக்கும்.
இந்த படத்தில் செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோரும் முக்கிய ரோல்களில் நடித்து இருக்கின்றனர்.

தெலுங்கில் தள்ளிவைப்பு
அதே அக்டோபர் 31ம் தேதி தெலுங்கிலும் ஆர்யன் படத்தை ரிலீஸ் செய்வதாக விஷ்ணு விஷால் முன்பு அறிவித்து இருந்தார்.
ஆனால் அதே தேதியில் ரவி தேஜாவின் Mass Jathara படம் ரிலீஸ் ஆக இருக்கிறது என்பதை காரணம் காட்டி ரிலீஸை தள்ளி வைத்து இருகிறார்.
தெலுங்கில் மட்டும் நவம்பர் 7ம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என தெரிவித்திருக்கிறார் விஷ்ணூ விஷால்.


