செல்பி எடுப்பதற்கு பொலிஸ் அறிக்கையை கேட்கும் நிலைமைக்கு நான் தள்ளப்பட்டுள்ளேன் என்று மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மொட்டுக் கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பயத்தில் நாமல்
இதன்போது, தொடர்ந்துரையாற்றிய அவர், ”சில அமைச்சர்களின் கனவில் கூட நான் தான் தெரிகிறேனாம். அதனால் நான் மிகவும் அவதானமாகவே இருக்கிறேன். சிலர் ‘எனது அன்பே’ என எனது பெயரை தொலைபேசியில் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல்கள் மற்றும் போதைப் பொருட்களை கட்டுப்படுத்தலில் பக்கம் சார்ந்து செயற்படுகிறது. இதில் யாருக்கும் நீதி கிடைக்கப் போவதில்லை.
அரசுக்கு சார்பான பாதாள குழுவினரை பாதுகாக்கவும், அவர்கரூடாக எதிர்க்கட்சியினை அடக்கி ஆள நினைக்குமானால் அதற்கு எவ்விதத்திலும் நாம் இடமளிக்க மாட்டோம்.
பொலிஸ் துறையில் அரசியல்
அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்ட சிலருக்கு அரசாங்கம் பொலிஸ் திணைக்களத்தின் பிரதான நாட்காலிகளில் உட்கார வைத்துள்ளது. அவர்கள் தான் சார்ந்த அரசாங்கத்திற்கு சார்பாக செயற்படுவதால் முழு பொலிஸாரின் கௌரவத்தை பாதிக்கிறது.

வெலிகம பிதேச சபைத் தலைவர், மக்கள் தினத்தன்று படுகொலை செய்யப்படுகிறார். அதை அரசாங்கம் பாதாள குழுக்களின் மோதல் என தெரிவிக்கிறது.
துப்பாக்கியுடன் ஒருவர் பிரதேச சபைக்குள் செல்வதற்கு எவ்வாறு சுதந்திரம் கிடைத்தது என்ற சந்தேகம் எமக்குள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

