முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மாகாண சபை தேர்தலை நடாத்த தயங்குவது ஏன்

இலங்கையின் தேர்தல் முறைகளில் மாகாண சபை தேர்தல் என்பதும்
முக்கியமானதொன்றாகும்.

ஒன்பது மாகாணங்களிலும் தற்போது ஆட்சி ஜனாதிபதியினால்
நியமிக்கப்பட்ட ஆளுநர்களின் தலைமையில் நிர்வாக கட்டமைப்பு உள்ளிட்ட அத்தனை
அதிகாரங்களும் காணப்படுகின்றது.

மாகாண சபை தேர்தல் ஆட்சிக்கு மாறி மாறி வருகின்ற அரசாங்கங்களால் இழுத்தடிப்பு
செய்யப்படுகின்ற நிலை காணப்படுகிறது.

தேசிய மக்கள் சக்தி

தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும்
அதே நிலைப்பாட்டில் தான் உள்ளது என்பதை அறிய முடிகிறது.

தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வந்ததன் பிற்பாடு மாகாண சபை தேர்தலை
நடாத்துவதா பழைய முறையில் நடாத்துவதா என்ற தடுமாற்றங்கள் காரணமாக இழுத்தடிப்பு
செய்யப்படுகிறதா அல்லது அநுர அரசாங்கம் வடகிழக்கில் தோல்வியை சந்தித்து
வாக்குகளில் தமிழ் முஸ்லீம் மக்களின் செல்வாக்கு இழக்கப்பட்டு விடுமோ என்ற
அச்சம் காணப்படுகிறதா என்ற சந்தேகம் நிலவுகிறது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில்
பெற்ற வாக்குகளில் உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது தேசிய மக்கள் சக்தியின்
வாக்கு வீழ்ச்சி கண்டுள்ளது.

மாகாண சபை தேர்தலை நடாத்த தயங்குவது ஏன் | Why Hesitation Hold Provincial Council Elections

தமிழ் மக்களை திருப்திப்படுத்த இந்திய தலையீட்டுடன் மாகாண சபை முறைமை கொண்டு
வரப்பட்டாலும் அதன் பலன்களை முஸ்லீம்,மலையக சமூகம் ஏன் பெரும்பான்மை சமூகமும்
பெற்றுக் கொண்டுள்ளார்கள்.

தேர்தலை நடாத்தாது இழுத்தடிப்பு செய்வது அரசியல்
ரீதியானதும் சட்டச் சிக்கல்களை கொண்ட தடங்களே காரணத்தை வைத்து பொடுபோக்காக
காலத்தை கடத்துகின்றனர்.

இவ்வாறான நிலையில் இது குறித்து அரசியல் ஆய்வாளரும் பத்திரிகையாளருமான
அ.நிக்ஸன் தெரிவிக்கையில் ” 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு அமைவாக மாகாண சபை
தேர்தல் நடாத்தப்பட வேண்டும்.

இறுதியாக சுமாராக 2026 உம் பிறக்கவுள்ள நிலையில்
ஏழு வருடங்களாகின்றது. ஆனால் தேர்தல் நடாத்தப்படவில்லை. இந்த மாகாண சபை
தேர்தல் முறை சகல மக்களுக்கும் அதிகார பகிர்வை வழங்கக்கூடியதாகவுள்ள நிலையில்
குறிப்பாக வடகிழக்கு தமிழ் மக்களுக்கு முக்கியமானதாகும்.13ம் திருத்தச்
சட்டத்தில் பல குறைபாடுகள் காணப்பட்டாலும் தேர்தல் என்பது கட்டாயமானது.

வடகிழக்கு மக்களின் அரசியல் அபிலாசைகளை கருத்திற் கொண்டு மாகாண சபை தேர்தல்
ஜனநாயக வழியில் பிரச்சினைகளை தீர்க்கும். குறிப்பாக வடகிழக்கு மக்களின் ஒரு
ஆரம்ப புள்ளியாக இத்தேர்தல் நடாத்தப்படுவது முக்கியமானதாகும்.

ஒற்றையாட்சி அரசு

ஜேவிபி உள்ளிட்ட சிங்கள பிரதான அரசியல் கட்சிகள் அல்லது சிங்கள பகுதி மாகாண
சபைகளில் அங்கம் வகித்த முன்னாள் முதலமைச்சர்கள், உறுப்பினர்கள் எவரும்
தேர்தலை நடத்த வேண்டும் என இதுவரை வாய்திறக்கவில்லை.

1987 இல் இந்திய – இலங்கை ஒப்பந்தம் மூலமாக உருவாக்கப்பட்ட மாகாண சபை முறையும்
அதற்காக உருவாக்கப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டமும் தமிழர்களுக்கானது.
2017 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்ட மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு கோரி, 2024 ஆம்
ஆண்டு நவம்பர் மாதம் வரை எதிர்க்கட்சியாக இருந்த ஜேவிபி கோரவேயில்லை.

மாகாண சபை தேர்தலை நடாத்த தயங்குவது ஏன் | Why Hesitation Hold Provincial Council Elections

“இலங்கை ஒற்றையாட்சி அரசு” என்ற கட்டமைப்பு 2009 இற்குப் பின்னர், தனது பௌத்த
தேசிய கொள்கையை நன்றாக நீட்டி நிமிர்த்தி நிம்மதியாக – அமைதியாக – இலகுவாக,
நகர்த்திச் செல்கிறது என்பதை மாத்திரம் வேண்டுமென்றே புரிந்துகொள்ள
மறுப்பார்கள்.அதனை அவ்வப்போது நியாயப்படுத்தியும் விடுவர்.

எது எப்படியாக இருந்தால் மாகாண சபை முறை என்பது தமிழ் மக்களுக்கானது அரசியல்
அபிலாசைகளுக்கானது என்றார்.

தேர்தலை நடாத்தி சபைகளை சுயமாக இயங்க வைக்க விடுவதனால் 13ஆம் திருத்தத்தை
முழுமையாக நடைமுறைப்படுத்த தமிழ் அரசியல்வாதிகளின் கோரிக்கைகளும் காணப்படலாம்.

எவ்வாறாயினும் வடகிழக்கு தமிழர் தாயகத்தில் உள்ள தமிழ் மக்களுக்கு நிரந்தர
அரசியல் தீர்வு கிடைக்கவில்லை என்பதே கலநிலவரம் சொல்கிறது. இதனால் தேர்தலை
விரைவாக ஆளும் அரசாங்கம் நடாத்தி அதிகார பரவலாக்கத்தை செய்தால் வடகிழக்கு
தமிழ் அரசியல் தலைவர்களும் விழிப்படைய வேண்டி வரும்.

ஆனாலும் அநுர அரசாங்கம் தேர்தலை நடாத்திக் காட்டாமல் ஏன் தயங்குகிறது. மக்கள்
மனதில் மாற்றம் திடீரென ஏற்பட்டு வாக்குச் சரிவு ஏற்படுமோ என்ற அச்சநிலையில்
உள்ளார்கள் என்பதுதான் பெரும்பாலான அரசியல் தரப்புக்களின் கணிப்பாக
காணப்படுகிறது.

இவ்வாறான நிலையில் தேர்தல் தொடர்பில் பல திட்டங்களை மேற்கொண்டு வரும்
நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் (CAFFE)
நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மகீன் தெரிவிக்கையில்
“மாகாண சபை தேர்தலை நடாத்த முடியாமைக்கு தேர்தல் ஆணைக்குழுவுக்கு சட்டச்
சிக்கல் நிலவுகிறது.

சில மாகாணங்களில் 2012ல் இறுதியாகவும், 2014லும் தேர்தல்
நடந்துள்ளது. இதன் பிரகாரம் 2017 ம் ஆண்டு மற்றும் 2019 ம் ஆண்டு வரைக்கும்
சரியான கால எல்லைக்குள் மாகாண சபை ஆட்சியை வடக்கு ,தெற்கு மாகாணங்கள்
முடிவுறுத்தியமையை புள்ளி விபரங்கள் எடுத்துக்காட்டுகிறது.

மாகாண சபை முறை

2017 தொடக்கம் 2020
க்கு இடையில் “நல்லாட்சி அரசாங்கம்” ஆட்சி செய்த போது இதனை பொருட்படுத்தவில்லை
2020ல் அரசாங்கம் மாறியதால் பொறுப்புக் கூற வேண்டிய நிலை ஏற்பட்டதால் கலப்பு
முறை தேர்தல் தேவை என்பதால் மீள் எல்லை நிர்ணய ஆணைக்குழுவை உருவாக்கி பிரதமர்
தலைமையில் குறித்த அறிக்கை இரு மாதங்களில் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என
கூறிய போதும் அது சாத்தியமாக்கப்படவில்லை என்பதாலும் நாடாளுமன்றத்திலும்
சட்டம் நிறைவேற்றப்படவில்லை.

இதனால் புதிய முறையிலா? அல்லது பழைய முறையிலா?
என்ற நிலையில் தேர்தலை நடாத்த முடியாது தற்போது வரைக்கும் தத்தளிக்கின்றனர்.
இதனால் தற்போதைய அரசாங்கமும் சரியான முடிவு எடுக்க தவறியுள்ளனர்.

மாகாண சபை தேர்தலை நடாத்த தயங்குவது ஏன் | Why Hesitation Hold Provincial Council Elections

இதனால்
சாட்டுப் போக்குகளை சொல்லி அரசாங்கம் நழுவ முடியாது. பெரும்பான்மை ஆசனங்களை
கொண்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையுடன்
சட்டத்தை நிறைவேற்றி கொள்ள முடியும்.

அதாவது எல்லை நிர்ணயத்தில் பிரச்சினைகள்
காணப்படுவதாக இருந்தால் விகிதாசர முறையில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை
ஊடாக கொண்டு வர முடியும்.

எல்லை நிர்ணயத்துக்கு மீண்டும் சென்று காலம்
கடத்தாது நாடாளுமன்றத்தில் பழைய முறையில் சட்டமாக கொண்டு வந்து தேர்தலை
நடாத்தி மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்து அதன் பிற்பாடு உரிய காலப்
பகுதிக்குள் அடுத்த எல்லை நிர்ணயம்,மாகாண சபை முறை ஒழிப்பு நடவடிக்கைகளை
மேற்கொள்ளலாம் என்பதே தனது அபிப்பிராயமாகும்.

வடகிழக்கில் மாகாண சபை தேர்தலை பொறுத்தமட்டில் கடந்த காலங்களில்
முதலமைச்சர்களாக தமிழ்,முஸ்லீம் தரப்புக்களை சேர்ந்த கட்சிகளே ஆட்சி
செய்துள்ளனர். இதே போன்று அநுர அரசாங்கத்துக்கு இம் முறை அதிக வாக்குகளை
முஸ்லீம் தமிழ் மக்கள் வழங்கியுள்ளனர்.

ஆனாலும் நேரடியாக வடகிழக்கில் ஒரு
முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட தெரிவு செய்யப்படவில்லை. தேசிய
பட்டியலில் கிழக்கில் ஒருவருக்கு ஆசனம் வழங்கப்பட்டது.
பல தடைகள் ,சிக்கல்கள் இருந்தாலும் மாகாண சபை முறையை அரசாங்கம் நடாத்தியே ஆக
வேண்டும்.

அப்போது தான் ஜனநாயக நாட்டின் பண்பாக மாற்றமடையும் . இப்போதிருந்தே
தேர்தலுக்கான ஆயத்தங்களை செய்வதனால் எதிர்வரும் ஜனவரியில் தேர்தல்
நடத்தப்படலாம் என்கின்ற நிலையும் அரசியல்வாதிகளின் மனநிலையில் தங்கியுள்ளது.

இதனால் வடகிழக்கு தமிழ் கட்சிகள் தேர்தலை வெற்றி கொள்ள பல பிரயத்தனங்களையும்
மேற்கொண்டு வருவதை எம்மால் காணக் கூடியதாகவுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.