வில்லனிடம் சிக்கிய வீடியோ
ஈஸ்வரியை ஆதி குணசேகரன் தாக்கிய வீடியோ அறிவுக்கரசியிடம் சிக்க, ஆதி குணசேகரனை மடக்க அவர் திட்டமிட்டு இருந்தார். ஆனால், அந்த வீடியோ அவருக்கே எமனாக மாறிவிட்டது.

இதனால் கெவின் என்கிற போட்டோகிராஃபரை அறிவுக்கரசி கொலை செய்தார். கெவின் இறப்பதற்கு முன் அந்த வீடியோவை தனது நண்பன் அஸ்வினிடம் கொடுத்திருந்தார். அந்த வீடியோவை வாங்கிவிட வேண்டும் என ஜனனி மற்றும் சக்தி போராடினார்கள்.

ஆனால், பணத்துக்கு ஆசைப்பட்டு அந்த வீடியோவை புதிய வில்லனிடம் அஸ்வின் கொடுத்துவிட்டான். மேலும் இந்த உண்மையை ஜனனியிடம் கூறுவதற்கு முன், புதிய வில்லன் அஸ்வினை கொலை செய்துவிட்டார். ஆனாலும், தான் இறப்பதற்கு முன் ஜனனியிடம் உண்மையை கூறிவிட்டார் அஸ்வின். இருப்பினும் ஜனனியிடம் அந்த வீடியோ இல்லை.

அஜித் கையில் பிளேடு வைத்து கிழித்த ரசிகர்.. ஷாக்கிங் தகவல்
ஆதி குணசேகரன் அதிர்ச்சி முடிவு
எப்படியாவது அந்த வீடியோவை வாங்க வேண்டும் என ஜனனி முயற்சி எடுக்க. மற்றொரு புறம் ஆதி குணசேகரன் தங்களிடம் இருந்து மறைக்கும் மற்றொரு உண்மையை கண்டறிய சக்தி செல்கிறார். இதை அறியும் ஆதி குணசேகரன் தனது தம்பி என்று கூட பார்க்காமல் சக்தியை கொலை செய்ய அடியாளிடம் கூறுகிறார்.

பரபரப்பாக நகரும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் புது வில்லனிடம் ஆதி குணசேகரன் சிக்கிக்கொண்டார், இதன் பின் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்…

