ஆண்பாவம் பொல்லாதது
கடந்த வாரம் திரைக்கு வந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள படங்களில் ஒன்று ஆண்பாவம் பொல்லாதது.

இப்படத்தை அறிமுக இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்க ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இவர்களுடன் இணைந்து விக்னேஷ்காந்த், ஷீலா ராஜ்குமார், ஜென்சன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

சன் டிவியில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட சீரியல்கள்… ஒரு லிஸ்ட் இதோ
வசூல்
ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், ஆண்பாவம் பொல்லாதது திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் உலகளவில் 3 நாட்களில் ரூ. 4.1 கோடி வசூல் செய்துள்ளது. முதல் மூன்று நாட்களில் இப்படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ள நிலையில், வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

