முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

டக்ளஸ் தேவானந்தாவை தேடிச்சென்ற சி.வி.கே…! வெடித்த புதிய சர்ச்சை

சி.வி.கே. சிவஞானம் எமது கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவை (Douglas Devananda) தேடிச் சென்று சந்தித்து ஆதரவு கோரியதை விமர்சித்த தமிழரசுக்கட்சி ஆயுட்கால உறுப்பினர் அன்பின் செல்வேந்திரன் கருத்தை வன்மையாக கண்டிப்பதாக மட்டு மாவட்ட ஈ.பி.டி.பி. கட்சியின் மாவட்ட இணைப்பாளர் சிவானந்தராஜா தெரிவித்துள்ளார்.

2018 தமிழரசு கட்சி ஆதரவு கோரி வழங்கிய போது நீங்கள் மதுபோதையில் இருந்ததா? அல்லது போதை மாத்திரைகள் பாவித்து கொண்டிருந்தார? என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

மட்டக்களப்பில் ஈ பி.டி.பி கட்சியின் வாராந்த ஊடக மாநாடு நேற்று புதன்கிழமை (05) இடம்பெற்ற போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழரசு கட்சி ஆதரவு கோரினர்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின்னர் எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி கே. சிவஞானம் தேடிச்சென்று நேரில் சந்தித்தமை தொடர்பாக தமிழரசு கட்சியின் ஆயுட்கால உறுப்பினர் அன்பின் செல்வேந்திரன் என்பவர் எமது கட்சி செயலாளர் நாயகத்திற்கு எதிராக கருத்துக்களை முன்வைத்தார்.

டக்ளஸ் தேவானந்தாவை தேடிச்சென்ற சி.வி.கே...! வெடித்த புதிய சர்ச்சை | Epdp Douglas Sivagnanam Meeting Controversy

2018 ம் ஆண்டு உள்ளூராட்சி தேர்தலின் போது எங்கள் கட்சியின் தமிழரசு கட்சி ஆதரவு கோரினர். அதற்கு ஆதரவு வழங்கினோம் அப்போது இந்த ஆயுட்கால உறுப்பினர் மதுபோதையில் இருந்தார? அல்லது போதை மாத்திரைகள் பாவித்து கொண்டிருந்தார? அப்போது அவர் என்ன நிலையில் இருந்தார் என தெரியவில்லை?

முன்னாள் மறைந்த ஜனாதிபதி பிரேமதாச 1990 ஆம் ஆண்டு தமிழ் மக்களை உயிருடன் ரயர் போட்டு எரித்து படுகொலை செய்த ஒருவர் அவரின் மகன் சஜித் பிரேமதாசவுக்கு ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு வாக்களிக்குமாறு இரா.சாணக்கியன் மேடையில் ஏறி ஆதரவு கோரினார்.

அப்போது இந்த ஆயுட்கால உறுப்பினர் தூக்க கலக்கத்தில் இருந்தீர்களா? இந்த விமர்சனத்தை வன்மையாக கண்டிக்கின்றோம்

போலி தேசியத்தை பேசி

இன்று வடகிழக்கு பிரிந்திருக்கிறது. 75 வருட காலமாக தேசியத்தை பேசி தமிழ் மக்களுடைய உரிமைகள் அத்தனையும் அழித்து இணைந்திருந்த வட கிழக்கை பிரித்திருக்கிறார்கள்.

டக்ளஸ் தேவானந்தாவை தேடிச்சென்ற சி.வி.கே...! வெடித்த புதிய சர்ச்சை | Epdp Douglas Sivagnanam Meeting Controversy

இன்னும் 75 ஆண்டு காலம் வழங்கப்பட்டாலும் போலி தேசியத்தை பேசி தமிழ் மக்கள் உரிமைகள் அத்தனையும் இல்லாமல் செய்து வட கிழக்கில் தமிழ் பாடசாலை ஒன்று இருக்கிறதா என தேடித்திரியும் அளவிற்கு உங்கள் அரசியலை கொண்டு செல்வார்கள்.

உங்களுக்கு தமிழ் மக்கள் மீது அக்கறை இல்லை.

உங்கள் உறவினர்கள் சந்ததியினர் சொத்துடன் வாழ வேண்டும் என அரசியலே டீல் போட்டு மதுபான அனுமதிபத்திரம் எடுப்பது, கொழும்பில் சொகுசு வீடு கேட்பதும் இப்படியான டீல்களுடன் கடந்த கால ஆட்சியாளர்களுடன் நீங்கள் ஒட்டி உறவாடி இருந்தீர்கள்.

நீங்கள் நினைத்திருந்தால் மைத்திரிபால சிறிசேனவின் நல்லாட்சி அரசாங்கத்திலே பிரிந்த வடகிழக்கை இணைந்திருக்க முடியும்.

அவைகளை சிந்திக்கவில்லை போலி தேசியம் என நரித்தோலை போர்த்திக் கொண்டு புலித்தோல் என்று சொல்லி மட்டக்களப்பு மக்களை மட்டுமல்ல இலங்கையில் உள்ள ஒட்டுமொத்த தமிழர்களுடைய உரிமைகளையும் அழித்து கொண்டிருக்கின்றீர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.