சரிகமப சீசன் 5
சரிகமப சீசன் 5, ஜீ தமிழில் ரசிகர்களை கவர்ந்த ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று.
கடந்த மே 24ம் தேதி தொடங்கப்பட்ட இந்த ஷோ சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் ஒளிபரப்பாகி வந்தது.
அர்ச்சனா தொகுத்து வழங்க ஸ்ரீநிவாஸ், விஜய் பிரகாஷ், சைந்தவி, ஸ்வேதா மோகன், எஸ்.பி.சரண், கார்த்திக் என பலர் நடுவர்களாக இருந்து வருகிறார்கள்.

பக்கா கிரிமினல் பிளான் போட்ட ரோஹினி, முத்து செய்யப்போவது என்ன… சிறகடிக்க ஆசை எபிசோட்
25 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட 5வது சீசன் இப்போது இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. தற்போது சுஷாந்திக்கா, ஸ்ரீஹரி மற்றும் சபேஷன் ஆகிய 3 பேரும் பைனலுக்கு தேர்வாகியுள்ளனர்.

4வது போட்டியாளர்
நான்காவது இறுதி போட்டியாளரை தேர்வு செய்வதற்காக, இந்த வாரம் ‘One & One’ சுற்று நடைபெற உள்ளது. இதில் 7 போட்டியாளர்கள் தங்கள் திறமையைக் காட்ட இருக்கின்றனர்.

இந்த வார போட்டியில் எல்லா போட்டியாளர்களும் அட்டகாசமாக பாடியுள்ளனர். இதில் யார் 4வது இடத்தை பிடிப்பார் என்று பார்த்தால் அருண் மற்றும் சீனு ஆகியோருக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

