கமல்ஹாசன்
கமல்ஹாசன், இவரை நடிகர் என்பதா, தயாரிப்பாளர், பாடகர், இயக்குனர், கதையாசிரியர் என பன்முக திறமையை வெளிக்காட்டியவர்.
ரசிகர்கள் இவருக்கு ஏகப்பட்ட அடைமொழிகளைத் தந்துள்ளனர், ஆனால் அந்த பெயர்களை எல்லாம் துறப்பதாக கமல்ஹாசன் கடந்த வருடம் அறிவித்திருந்தார்.
ரஜினிக்கு மட்டுமின்றி பல நடிகர்களுக்கு போட்டியாக ஓடிக்கொண்டிருந்த கமல் திடீரென அரசியல் பிரவேசம் செய்தார்.

ஆனால் அந்த பயணம் திருப்தி தராததால் சினிமா-அரசியல் என இரண்டிலும் தலைக்காட்டி வருகிறார்.
கடைசியாக இவரது நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் நடித்த தக் லைஃப் படம் வெளியானது, ஆனால் படம் சரியான வரவேற்பு பெறவில்லை.

குணசேகரன் போடும் மாஸ்டர் பிளான், ஜனனி சமாளிப்பாரா?… எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ
சமீபத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகி இருந்தது. ரசிகர்களும் இந்த அறிவிப்பு கேட்டு செம குஷியாகியுள்ளனர்.

சொத்து மதிப்பு
இன்று நடிகர் கமல்ஹாசன் தனது 71வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார், அவருக்கு பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர். இந்த நிலையில் கமல்ஹாசனின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வலம் வருகிறது.

கமல்ஹாசனின் அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ. 60 கோடி என்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு கிட்டத்தட்ட ரூ. 250 கோடி என்று கூறப்படுகிறது.
மொத்தமாக கமல்ஹாசனின் சொத்து மதிப்பு ரூ. 300 கோடி வரை இருக்கும் என்கின்றனர்.

